கூண்டோடு ராஜினாமா நாடகம்... posted byN.S.E.மஹ்மூது (KAYALAPATNAM. - INDIA)[25 October 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 42081
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
காயல்மாநகர மக்களே!
நமது நகராட்சியின் அலுவல்கள் விடாகொண்டன் , கொடாகொண்டன் கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது – இதிலே எவரையும் நல்லவர்கள் என்று சொல்வதற்கு இல்லை – தலைவராகட்டும், உறுப்பினராகட்டும் ஏன் அரசு பணியாளர்களானாலும் சரி, எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
---------------------------------------
இவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் சுயனலன் பார்ப்பவர்களாகவே! இருக்கின்றனர் – யாருக்கும், எவருக்கும் மக்களை பற்றிய சிந்தனை இல்லை.
பணம் சம்பாதிக்க என்று சிலர் – உன்னை வெளியேற்றுவதே! எங்கள் நோக்கம், அதை எந்த வழியிலாவது செய்து காட்டுவோம் என்று பல வழிகளில் முயற்சி செய்கின்றனர் சிலர் – அதெல்லாம் முடியாது என்ன செய்தாலும் போகமாட்டேன் பதவிகாலம் முடியும் வரை என்று சிலர் இப்படியாக நகராட்சியை நகரவிடாமல் செய்துவிட்டனர்.
----------------------------------------
நான்கு வருடங்கள் உருண்டோடிவிட்டது – இந்த நான்கு வருடத்தில் தலைவர் முதல் உறுப்பினர்வரை எவருமே மக்களின் மதிப்பை பெறவில்லை.
நகராட்சி தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு வருடம்தான் உள்ளது – இந்த ஒரு வருடமும் மிக விரைவாக ஓடிவிடும் – இந்த இடைக்காலத்தில் மக்களின் அனுதாபத்தைப் பெற பரவலாக நாடகங்கள் நடைபெறும் – அதிலே கூண்டோடு ராஜினாமா என்று பெறும்பாலான உறுப்பினர்கள் ராஜினாமா செய்து நாடகத்தை அரங்கேற்றுவர்.
அப்போதுதானே! நாங்களெல்லாம் நல்லவர்கள் – மக்களுக்கு சேவை செய்ய சென்ற போர்டில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் எல்லோரும் ஒட்டு மொத்தமாக ராஜினாமா செய்தோம் – இப்போது எங்களுக்கு வாய்ப்புத் தாருங்கள், எங்களை தேர்ந்தெடுங்கள் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்போம் என்று மக்களை மீண்டும் பைத்தியக்காரர்களாக ஆக்கமுடியும்.
--------------------------------------
ஆகவே! மக்கள், ராஜினாமா என்ற நாடகத்தை நம்பாதீர்கள் – அவர்கள் ராஜினாமா செய்யவில்லை என்றாலும்கூட அடுத்த தேர்தலில் எந்த பழைய உறுப்பினர்கள் போட்டியிட்டாலும் அவர்களை ஆதரிக்காதீர்கள் – தலைவர் முதல் உறுப்பினர்வரை எந்த பழைய மெம்பரும் வேண்டாம் நமது நகராட்சிக்கு.
இந்த மன்றத்தில் உள்ளவர்கள் மட்டுமல்ல இதற்கு முன்பு இருந்தவர்களில் எவர் போட்டியிட்டாலும் சரியே! வேண்டவே வேண்டாம்.
-----------------------------------------
மக்களே!
இனி வரக்கூடிய காலம் , சூழல்கள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும் – எனவே சிந்தித்து செயலில் இறங்க வேண்டும் – எனவே இப்போதே! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!! – நலமான நகர்மன்றத்தினை உருவாக்க ஆயத்தமாகுங்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross