Re:... posted byVilack sma (jeddah)[25 October 2015] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42083
மாமா அவர்களின் கருத்து பதிவில் ஒட்டுமொத்த நகர்மன்றத்தையும் சாடி இருக்கிறார்கள் .சில வேலைகள் தலைவராலும் மற்ற வேலைகள் உறுப்பினர்களாலும் தடைபட்டுள்ளது என்றும் மொத்தத்தில் இரண்டு பக்கமும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் கதைதான் என்றும் , வரும் தேர்தல்களில் பழையவர்கள் எவரையும் தேர்ந்தெடுக்க வேண்டாமென்றும் அறிவுருத்துவதுபோல் உள்ளது கருத்துபதிவு .
நல்லவர்கள் என்று நீங்கள் நினைக்கும் நபர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சொல்லுங்களேன் . அப்படியே நீங்கள் நினைக்கும் அந்த நல்ல நபரை தேர்ந்தெடுத்தாலும் அவர் நல்லவராகவே இருப்பார் என்பதற்கு என்ன உத்தரவாதம் .?
தடைபட்ட வேலைகளுக்கெல்லாம் காரணகர்த்தா யார் என்று தெரியாமல் , ஒட்டுமொத்த நகர்மன்றத்தையும் குறைகூறினால் எப்படி ?
உதாரணத்திற்கு , bio gas plant தற்போதுள்ள இடத்தில் இயங்காமல் இருக்க தடையாணை வாங்கியது யார் ? தலைவியோ , நகர்மன்ற உறுப்பினர்களோ இல்லை . புதிது புதிதாக முளைத்திருக்கும் சமூக சேவை இயக்கங்களே இதற்கு காரணம் . தற்போதுள்ள இடத்தில் இந்த வேலை நடக்காமல் போனால் ஊரின் வேறு எந்த இடத்திலும் இந்த வேலை நடக்க விடமாட்டார்கள் . இதற்கு தலைவிக்கு பிடிக்காத உறுப்பினர்கள் என்று நீங்கள் நினைப்பவர்கள்தான் எதிர்ப்பு காட்ட வேண்டும் என்றில்லை . பொது ஜனங்கள் எதிர்பார்கள் . ஏனெனில் இந்த வேலைக்கு தடை உத்தரவு வாங்கியது ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற பொது ஜனம்தானே ! இதனுடைய எதிரொலி பப்பரப்பள்ளி குப்பை எரியூட்டும் புகையால் நாம் படும் அவஸ்தை . பப்பரப்பள்ளிக்கு மாற்று இடம் நிச்சயம் கிடைக்காது . ஏனெனில் மாற்று இடத்தில் வசிக்கும் மக்கள் இதை எதிர்பார்கள் . ஆக இதற்கு ஒரேவழி bio gas plant தற்போதுள்ள இடத்தில் இயங்குவதுதான் . இப்போ சொல்லுங்க மாமா , இந்த வேலைக்கு குறுக்கீடு எங்கிருந்து வருகிறது ?
இதுபோன்றுதான் ஊரில் உள்ள தெருக்களும் . எதையாவது ஒரு காரணத்தை சொல்லி நடக்க இருக்கும் வேலைகளுக்கு தடைகள் . இதனால் மக்களுக்கு பல வகையிலும் தொல்லைகள் .
லஞ்சம் எங்குதான் இல்லை . லஞ்சம் கொடுக்காமல் நம்முடைய வாழ்க்கை முறை உள்ளதா ? இல்லை என்பதுதான் உண்மை . ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் ஒருசிலதை பொறுத்துதான் போக வேண்டும் . Bio Gas plant , பழுதடைந்த சாலைகள் புதுப்பித்தல் மற்றும் பிற காரியங்கள் இவை அனைத்தும் ஏதோ தனிப்பட்ட நபர் அனுபவிக்க இருக்கும் காரியம் இல்லை . ஒட்டுமொத்த ஊர் ஜனங்களும் அனுபவிக்க இருப்பது . இப்படி அனைத்து வேலைகளையும் சமூக சேவை என்ற பெயரில் வரும் ஒரு சிலரால் தடைகள் . இதனால் ஊர் மக்கள் அனைவருக்கும் தொல்லைகள் . எல்லாவற்றிலும் மூக்கை நுழைத்தால் எந்த காரியமும் நடக்காது .
இப்போ சொல்லுங்க மாமா , ஊரில் நடக்கும் இடர்பாடுகளுக்கு காரணம் யார் ? தலைவரோ , உறுப்பினர்களோ இல்லை . யார் என்பதை தேடிப்பிடித்து எழுதுங்கள் .
வரும் தேர்தல்களில் நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ள அந்த நல்ல நபர் , அவர் வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது . வேலை நடக்கிறதா , மக்கள் பயனடைகிறார்களா என்பதை மட்டும் பார்க்கவும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross