Re:...மூடு டாஸ்மாக்கை மூடு... posted bymackie noohuthambi (colombo)[31 October 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42120
சகோதரர்கள் மிகக் கவனமாக கையாள வேண்டிய தருணம் இது. ஜனநாயக முறையில் போராடினாலும் உங்களை ஏதாவது சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளே அடைத்து விடுவார்கள் ஜாக்கிரதை.
''மூடு டாஸ்மாக்கை மூடு'' என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டாகி போனதால் ஏற்பட்ட பிரச்சினை எல்லோருக்கும் ஒரு படிப்பினை. காவல் துறை உங்களை கைது செய்தால் அவர்கள் எந்த செக்ஷனிலும் உங்களை உள்ளே தள்ளலாம். ஜனநாயகம் வெங்காயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கோவை குண்டு வெடிப்பில் கைதானவர்கள் இன்னும் குற்றப் பத்திரிக்கையே தாக்கல் செய்யப் படாமல் தங்கள் இளமைகளை சிறையில் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். 1992 இல் ஊரில் நடந்த மீன்கடை அகற்றும் போராட்டத்தில் அப்பாவிகள் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டார்கள் அவர்கள் மீது எந்த செக்க்ஷனில் கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது என்பது என்போன்றவர்களுக்கு தெரியும். அடியும் உதையும் மிதியும் காவல் துறையின் அத்து மீறலும் அதனால் இன்றும் கூட என் காதுகள் கேட்கும் சக்தியை இழந்து நிற்கிறேன். எனவே சகோதரர்கள் தங்கள் இளமையை வேலையை மனைவி மக்களை இழந்து இந்த போராட்டத்துக்கு விலை கொடுக்க வேண்டாம். அல்லாஹ் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று தஹஜ்ஜத் தொழுது து ஆ கேளுங்கள். நிச்சயம் ஆட்சியாளர்கள் ஆராய்ச்சி மணியை அது அடிக்கும். மிக சக்தி வாய்ந்த ஆயுதம் பிரார்த்தனைதான்.
உங்கள் உணர்வுகளை தூண்டி விடுபவர்களின் சதிக்கு ஆளாகி விடாதீர்கள். தெரிந்து கொள்ளுங்கள் திரிகள் மட்டுமே எரிகின்றன தூண்டுகோல்கள் சுகமாக தூங்குகின்றன.....உங்களை விடுவிப்பதற்காக ஊர் மக்கள் திரண்டு வரமாட்டார்கள். இவனுக்கெல்லாம் இதெல்லாம் தேவையா என்று ஏளனம் பேசுவார்கள். .சொந்த அனுபவம் இது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross