திருச்செந்தூரிலுள்ள முஹ்யித்தீன் பள்ளிவாசல் அருகில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதை அங்கிருந்து அகற்றக் கோரி, சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா - SDPI சார்பில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்து முறையிடப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின்போது, டாஸ்மாக் கடையை அவ்விடத்திலிருந்து அகற்றுவதாக மாவட்ட ஆட்சியர் கூறியதாக, SDPI கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இதுகுறித்து பலமுறை மனு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் எச்.ஷம்சுத்தீன், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்கு [வழக்கு எண்: WP(MD) No.14816/2015] தொடர்ந்திருந்தார்.
வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர் மற்றும் வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆகஸ்ட் 18, 2015 அன்று,
இந்த உத்தரவு கிடைக்கபெற்ற 6 வாரங்களில், மனுதாரரின் ஜூன் 27 கோரிக்கையை பரிசீலனை செய்து, அதில் உள்ள விபரங்களை உறுதி செய்து, தகுதியின் அடிப்படையிலும், சட்டத்திற்கு உட்பட்டும் முறையான ஆணை பிறப்பிக்க - மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது
என உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
SDPI / PFI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |