காயல்பட்டினம் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால் ஸீ-கஸ்டம்ஸ் சாலை சீரமைக்கப்படாமல், விபத்துகளுக்குக் காரணமாகி வருவதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கைக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம் வருமாறு:-
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் (கிழக்குப் பகுதி) அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளி முதல் கடற்கரை வரை உள்ள பிரதான சாலையை சீரமைக்க (முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு) மனு அனுப்பியிருந்தோம். 07.08.2015 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலம் காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு - இச்சாலையைச் சீரமைக்க ஆணை அனுப்பப்பட்டு இருந்தது. இதுவரை சீரமைக்கப்படவில்லை.
தற்போதைய மழைக்காலத்தில் வாகனங்கள் - பொதுமக்கள் செல்ல முடியா நிலையில் மிகவம் சேதமடைந்து உள்ளது. மனிதாபிமானம் இல்லாத நகராட்சி நிர்வாகம், அதிகாரிகளின் அலட்சியத்தால் சாலை சீரமைக்கப்படவில்லை. அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. உயிர்ப்பலி ஏற்படும் கடின நிலை உள்ளது.
பழுதடைந்துள்ள இச்சாலையையும், ஊரில் பழுதடைந்துள்ள இதர சாலைகளையும் காயல்பட்டினம் நகராட்சி மூலம் சீரமைக்க தங்களின் நேரடியான தலையீட்டைத் தவிர வேறு வழியில்லை.
தங்களின் நேரடியான தலையீட்டை எமது சங்கம் மூலமும், ஊர் மக்கள் மூலமும் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து பெறப்பட்ட பதில் கடிதத்தில், இக்கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் ஒளிப்பிரதியுடன் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |