காயல்பட்டினம் நகராட்சியில் 8 இடங்களில் சாலைப் பணிகளுக்கும் (மொத்த மதிப்பு - 53.70 லட்சம் ரூபாய்), 1 இடத்தில பாலம் அமைக்கவும்
(மொத்த மதிப்பு - 6.00 லட்சம் ரூபாய்) - தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது.
இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 16 முதல் நவம்பர் 4 மாலை 3 மணிவரை பெறப்படும் என்றும், நவம்பர் 4 அன்று மாலை 3:30 அளவில், ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளுக்கான அனுமதி கடந்தாண்டு (ஜூன் 2014இல்) வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஒப்புதல்
வழங்கப்பட்ட 22 தெருக்களில், 6 தெருக்களுக்கு மட்டும் - கடந்தாண்டு ஆகஸ்ட் 2014 இல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அவைகளுக்கு
(மதிப்பீடு - 43.15 லட்ச ரூபாய்) நவம்பர் 2014 நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அச்சாலை பணிகள் சில வாரங்களுக்கு முன்பு நிறைவுற்றது.
மீதி இருந்த 16 தெருக்களில், 8 தெருக்களுக்கு (மொத்த மதிப்பு - 38.05 லட்சம் ரூபாய்) - இவ்வாண்டு ஜூலை 13 தேதிய டெண்டர் அறிவிப்பு, ஜூலை 24 அன்று https://tntenders.gov.in
இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் 5 அன்று திறக்கப்பட்டாலும், செப்டம்பர் - அக்டோபர் மாத
கூட்டங்களை பெருவாரியான நகர்மன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ள நிலையில், மன்ற அனுமதிபெற்று, அதற்கான வேலை ஆணைகள் இதுவரை
கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், காயல்பட்டினம் நகராட்சியின் பிரதான சாலைகளில் ஒன்றான சி கஸ்டம்ஸ் சாலையை, பேவர் பிளாக் (PAVER BLOCK) கொண்டு புனரமைக்க செப்டம்பர் 11 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கான டெண்டர் அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
|