UNITED
ECONOMIC FORUM (UEF) அமைப்பின் ஏற்பாட்டில், தொழில் மாநாடு (TRADE SUMMIT) சென்னை ITC GRAND CHOLA ஹோட்டலில் நடைபெறவுள்ளது. நவம்பர் 14 - 15 ஆகிய
இரு தேதிகளில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள் உட்பட உலகளவில் பிரசித்தி பெற்ற பல
முக்கிய நபர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டின் மூலம், பின்தங்கிய சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் வடிவமைப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும்
மேலும் பல்வேறு வழிகாட்டுதல்கள் மூலம் - இவ்வமைப்பின் உறுப்பினர் நிறுவனங்களுக்கு, 10,000 கோடி ரூபாய் அளவிலான தொழில்
மேம்பாட்டுக்கான முயற்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
UEF மாநாட்டு குழு உறுப்பினர்கள்
மாநாட்டில் கலந்துரையாடலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள்
மாநாட்டில் பேச அழைப்பு விடப்பட்டுள்ள முக்கிய நபர்கள்
மாநாட்டு அரங்க அமைப்பு
மாநாட்டு அரங்கில் - தொழில் நிறுவனங்கள் ஸ்டால் அமைக்கலாம்
மாநாட்டில் பங்கேற்க விரும்பும் தனி நபர்களுக்கான படிவம்
மாநாட்டில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
UNITED
ECONOMIC FORUM (UEF) அமைப்பு சென்னையில் 1979ம் ஆண்டு துவக்கப்பட்டது. கீழக்கரையை சார்ந்த மறைந்த தொழிலதிபர் ஹாஜி பி.எஸ்.அப்துர் ரஹ்மான், இவ்வமைப்பின் நிறுவனர். தற்போது இவ்வமைப்பில் 1000க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஹாஜி பி.எஸ்.அப்துர்
ரஹ்மானின் மூன்றாவது மகனும், COASTAL ENERGEN குழுமத்தின் அதிபருமான அஹமது ஏ.ஆர்.புஹாரி, UEF அமைப்பின் தலைவராக தற்போது உள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாடு குறித்து வெளியிடப்பட்டுள்ள புத்தகத்தை (BROCHURE) காண இங்கு அழுத்தவும்
இந்த மாநாட்டுக்கு என வெளியிடப்பட்டுள்ள இணையதளம் (www.ueftradesummit.com) காண இங்கு
அழுத்தவும்
UNITED ECONOMIC FORUM அமைப்பின் பணிகளை விளக்கும் அவ்வமைப்பின் இணையத்தளம் (www.unitedeconomicforum.org) காண இங்கு அழுத்தவும்
தகவலில் உதவி:
எஸ்.எஸ்.எம்.சதக்கத்துல்லாஹ், சென்னை. |