ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை, நவம்பர் 13ஆம் தேதியன்று நடத்திட, அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமீரக காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூட்ட ஏற்பாடுகளை சிறப்புற செய்வதற்காக தன்னார்வலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அழைப்பறிக்கை:-
துபை காயல் நல மன்றத்தின் நவம்பர் 2015 மாத செயற்குழு கூட்டம் மன்றத்தின் தலைவர் ஆடிட்டர் புஹாரி அவர்கள் வில்லாவில், 16.10.2015 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
இன்ஷா அல்லாஹ் துபை காயல் நல மன்றத்தின் 2015 ஆம் ஆண்டின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை துபை சத்வா-வில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் நடைபெறும் என அறியத் தருகிறோம்.
அமீரகத்தில் வாழும் அனைத்து காயலர்களும் இந்தப் பதிவையே அழைப்பாக ஏற்று, தங்களின் குடும்ப சகிதம் கூட்ட இடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கு முற்கூட்டியே வருகை தந்து, இறுதி வரை இருந்து கூட்டத்தை சிறப்பிக்க ஊக்கப்படுத்தும் வகையில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பயனுள்ள பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.
தாங்கள் அனைவரும் முற்கூட்டியே திட்டமிட்டு, இந்த நிகழ்வில் குடும்பதினர்கள் / காயல் நண்பர்கள் சகிதம் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதாலேயே இந்த நிகழ்வின் அறிவிப்பை முன்னரே அறியத்தருகிறோம்.
வருகை புரிவோரை வரவேற்கவும், திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளையும், விளையாட்டு நிகழ்சிகளையும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யவும் அதிகமான தன்னார்வ தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து மன்றத்தின் அலுவலக பொறுப்பாளர் சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி 055-4063711 என்ற எண்ணில் தொடர்புகொண்டு பதிவுசெய்து கொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(பொதுச் செயலாளர் - துபை காயல் நல மன்றம்)
மற்றும்
ஸிராஜுத்தீன்
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |