DCW தொழிற்சாலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, தேசிய பசுமை
தீர்ப்பாயத்தில் நவம்பர் 2 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் (KEPA) செய்தி
தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
DCW தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை எதிர்த்து, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு – KEPA
சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மே 26, 2014 அன்று தீர்ப்பாயத்தால் அனுமதிக்கப்பட்ட இந்த வழக்கில், அனைத்து தரப்பின்
எழுத்துப்பூர்வமான வாதங்கள் (PLEADINGS) சமர்ப்பிப்பு - செப்டம்பர் 3, 2015 அன்று நிறைவுற்றது.
இதனை தொடர்ந்து - இவ்வழக்கில் வாதங்கள் (SUBMISSIONS) - அக்டோபர் 5 அன்று துவங்கின.
அக்டோபர் 5 அன்று - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர் டி.நாகசைலா, தனது வாதங்களை துவக்கினார். 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த முதல் நாள் வாதங்களை தொடர்ந்து, வழக்கு
அக்டோபர் 10 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் இவ்வழக்கு விசாரணை அக்டோபர் 10 அன்று வந்தது. அப்போது - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) வழக்கறிஞர்
டி.நாகசைலா - சுமார் 1.5 மணி நேரம் - வாதங்களை முன் வைத்தார். இரண்டாம் நாள் வாதங்களின்
நிறைவில், நவம்பர் 2 தேதிக்கு வழக்கு விசாரணை தொடரும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மூன்றாவது நாளாக, நவம்பர் 2 அன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக
வழக்கறிஞர் டி.நாகசைலா தனது வாதங்களை தொடர்ந்தார். அன்றைய வாதங்களின் போது -
>>>> 1980 கள் முதல் எவ்வாறு மத்திய அரசின் CENTRAL MARINE FISHERIES RESEARCH INSTITUTE (CMFRI) அமைப்பு, DCW தொழிற்சாலையினால்
ஏற்படும் மாசு குறித்த விபரங்களை ஆவணப்படுத்தி வந்துள்ளன
>>>> இந்த ஆவணங்களும், இந்த பின்னணியும் - DCW தொழிற்சாலையின் விரிவாக திட்டத்திற்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்
நிபுணர் குழுவிடம் (EXPERT APPRAISAL COMMITTEE) இருந்து எவ்வாறு மறைக்கப்பட்டுள்ளது
>>>> பாதரசமானது (MERCURY) எவ்வாறு சுற்றுச்சூழலில் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கக்கூடியது
>>>> காயல்பட்டினம் கடலோரத்தில் இறந்தொதுங்கிய மீன்களில் எவ்வாறு பாதரசம் கண்டறியப்பட்டது; அவை எவ்வாறு உணவுகளில் செல்ல
வாய்ப்புள்ளது
>>>> இரு வெவ்வேறு வகையான பணிகளை (SYNTHETIC ORGANIC CHEMICALS; THERMAL POWER PLANT) அடங்கிய DCW தொழிற்சாலை விரிவாக்க
திட்டம், இரு வெவ்வேறு குழுக்கள் மூலம் பரிசீலனை செய்யப்படாமல், ஒரே குழுவினால் எவ்வாறு தவறாக பரிசீலனை செய்யப்பட்டது
>>>> தனது விரிவாக்க திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த DCW தொழிற்சாலை, தனது விண்ணப்பத்தில் (FORM-1) அருகில் உள்ள காப்பு காடு (RESERVED
FOREST), தாமிரபரணி ஆறு போன்ற தகவல்களை மறைத்ததால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு, ENVIRONMENTAL IMPACT
ASSESSMENT (EIA) ஆவணத்தில் உள்ளடங்க வேண்டும் என கோரிய தகவல்களில் (TERMS OF REFERENCE) ஏற்பட்டுள்ள குறைப்பாடுகள்
>>>> தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தொழிற்சாலைகளை - நிறுவவோ, விரிவாக்கம் செய்யவோ -
தடை விதித்துள்ள தமிழக அரசின் அரசாணை எவ்வாறு மீறப்பட்டுள்ளது
>>>> DCW தொழிற்சாலைக்கு முதன் முதலில் ஆவணம் தயாரித்த PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவனத்திற்கு, அந்த ஆவணம்
தயாரிக்க தகுதி (ACCREDITATION) இல்லாமை
>>>> DCW தொழிற்சாலைக்கு இரண்டாவதாக ஆவணம் தயாரித்த CHOLAMANDALAM MS RISK SERVICES PRIVATE LIMITED நிறுவனத்திற்கு, ஆவணம்
தயாரித்த காலகட்டத்தில், அந்த ஆவணம் தயாரிக்க தகுதி (ACCREDITATION) இல்லாமை
>>>> KEPA அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த இரு நிறுவனத்திற்கும், இந்த ஆவணங்களை தயாரிக்க தகுதியில்லை என்றும்,
அதிகாரத்தை மீறி அந்த இரு நிறுவனங்களும் ஆவணங்கள் தயார் செய்தது தவறு என்றும், கண்டிக்கத்தக்கது என்றும் மத்திய அரசின் QUALITY COUNCIL OF INDIA (QCI) அமைப்பு
விடுத்த எச்சரிக்கை விபரம்
உட்பட பல வாதங்களை - சுமார் 1.5 மணி நேரம் - முன் வைத்தார்.
மேலும் - இவ்வழக்கிற்கு அவசியமான முக்கிய, புது ஆவணங்களை தீர்ப்பாயத்தில் - புதிய விண்ணப்பம் (MISCELLANEOUS APPLICATION) மூலம்
சமர்ப்பித்துள்ளதாகவும், KEPA அமைப்பின் வழக்கறிஞர் டி.நாக்சைலா தெரிவித்தார்.
வாதங்களை கேட்ட நீதிபதி எம்.சொக்கலிங்கம் மற்றும் நிபுணர் உறுப்பினர் பி.எஸ். ராவ் ஆகியோர் - வழக்கினை, நவம்பர் 16 தேதிக்கு
ஒத்திவைத்தனர். நவம்பர் 16 அன்று, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் வழக்கறிஞர் டி.நாகசைலா தனது வாதங்களை
தொடருவார்.
இவ்வழக்கில் காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) சார்பாக வழக்கறிஞர்கள் டி.நாகசைலா, டாக்டர் வி.சுரேஷ் மற்றும் பிரீஸ்ட்லி
மோசஸ் ஆகியோர் ஆஜராகின்றனர்.
மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் திருமதி சி.சங்கமித்திரை, DCW நிறுவனம் சார்பாக வழக்கறிஞர்கள் ஆர்.வெங்கட்டவதன் மற்றும் நிவேதிதா,
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக வழக்கறிஞர் திருமதி ரீதா சந்திரசேகர், தமிழக அரசு சார்பாக வழக்கறிஞர்கள் எம்.கே. சுப்ரமணியம்
மற்றும் எம்.ஆர்.கோகுல் கிருஷ்ணன், PURE ENVIRO ENGINEERING PRIVATE LIMITED நிறுவன்ம் சார்பாக வழக்கறிஞர் வி.ஸ்ரீனிவாச பாபு,
CHOLAMANDALAM MS RISK SERVICES LIMITED சார்பாக வழக்கறிஞர் பி.பிரேம்குமார் ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராகின்றனர்.
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 8:35 / 8.11.2015] |