காயல்பட்டினம் நகருக்கான - ஐவேளை தொழுகை நேர அட்டவணையைக் கொண்ட கைபேசி செயலி (Android Mobile Phone Application), காயல்பட்டினம் குத்புஸ் ஸமான் குழுமத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் துவக்க விழா, 08.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த விளக்கப் பிரசுரம்:-
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
1. Re:... posted byAbdul Majeed (Bangalore)[06 November 2015] IP: 202.*.*.* India | Comment Reference Number: 42135
ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் ஒரே நேரத்தில் ஜமாஅத் வைபதட்கு பதிலாக சிறிது இடைவெளி விட்டு ஜமாஅத் வைத்தால் ஒரு பள்ளியில் முதல் ஜமாத்தை தவற விட்டவருக்கு அருகில் உள்ள மற்ற பள்ளியில் ஜமாஅத் கிடைக்குமே.
2. Re:.தொழுகைக்கான ..காலம் காட்டும் கருவி முக்கியம் அதைவிட முக்கியம் காலம் தவறாமல் ஜமாஅத்துடன் தொழுதல் ... posted bymackie noohuthambi (colombo)[06 November 2015] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42136
அது ஒரு மறக்கமுடியாத நிகழ்வு..
நடுநிலையாளர்கள் உலமாக்கள் கைபிசைந்து நின்று இந்த நவீன பித்னாவை எப்படி ஒழிப்பது என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரம்.
இளைஞர் ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்கள் இளைஞர்கள் மிகவும் கவலைப் பட்டார்கள். அதன் விளைவு புகாரி ஷரீப் வளாகத்தில் செய்யிது ஆலிம் அவர்கள் முதல் ஹாமித் பக்ரி போன்ற இளைஞர்கள் வேறு வேறு அணியில் இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எல்லோரும் இக்ஹ்லாசாக நினைத்ததால் அந்த பிரச்சினையை அல்லாஹ் தீர்த்து வைத்து உள்ளங்களை ஒன்று படுத்தினான் உலமாக்களை ஒற்றுமைப் படுத்தினான். தொழுகை நேரத்தை காட்டும் கருவி எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த நேரம் தவறாமல் எல்லோரும் அவரவர்கள் முஹல்லா பள்ளிககுக்கு சென்று இமாம் ஜமா அத்துடன் தொழுவது என்பதையும் வலியுறுத்தி பேசுங்கள்.
அந்த காலகட்டத்தில் காயல்பட்டினம் உலமாக்கள் சபை என்று ஒன்று ஏற்படுத்த வேண்டும் இப்படி பட்ட பிரச்சினைகள் தலை எடுக்கும்போது அவர்கள் கூடி பேசி திருமறையின் வெளிச்சத்தில் திருநபியின் வழிகாட்டு நெறிமுறையில் சஹாபாக்கள் வாழ்க்கை முறையில் இமாம்களின் தீர்ப்புப் படி அவற்றுக்கு தீர்வு காண வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டதாக எனக்கு ஞாபகம் அந்த உலமாக்கள் சபை இன்று வரை ஏற்படுத்தப் பட்டதாக தெரிய வில்லை.
இந்த நல்ல வேளையில் இளைஞர் ஐக்கிய முன்னணியின் உலமாக்கள் இளைஞர்கள் இதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் அந்த முன்னணியின் ஆரம்பகால நிறுவன உறுப்பினன் முதலாவது செயலாளர் என்ற உரிமையுடன் நண்பர்களை வேண்டிக் கொள்கிறேன். அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக . உங்கள் நல்ல முயற்சிகளுக்கு துணை நிற்பானாக ஆமீன் .
5. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[07 November 2015] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42140
அருமையான செயல்பாடு. நன்றிகளும் வாழ்த்துக்களும்.
நம் ஊரில் தொழுகைக்கான நேரத்தை ஒழுங்கு படுத்திய முன்னோர்கள், மற்றும் முயற்சியில் ஈடுபட்ட அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
அதே போல பிறை விசயத்திலும் உலமாக்கள் ஒன்றுகூடி ஒரு நல்ல முடிவை எடுங்களேன்.
- கூடுதலாக எல்லாப் பள்ளிவாசலிலும் கடிகாரத்தை சரியாக வைக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு பள்ளியில் பாங்கு முடிந்த பிறகு, வேறு பள்ளியில் சொல்ல ஆரம்பிக்கின்றார்கள். அவர்கள் தொழுகைக்கான அட்டவனையை சரியாக தான் பின்பற்றுகிறார்கள், ஆனால் கடிகாரம் 2,3,5 நிமிடங்கள் என்று வித்தியாசம் இருக்கிறது.
- சகோதரர் அப்துல் மஜீத் அவர்களே, உங்கள் கருத்து அருமை. ஆனால் சங்கடங்கள் பல இருக்கின்றனவே. நாம் தான் பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றோமே.
தொழுகைக்கு வாராதவனை தொழுக வாங்க என்று கூற ஆட்கள் இல்லை. தொழுக வருபவனை நீ இங்கு தொழுக வராதே, இப்படி தான் தொழுகனும் என்று 6 அடிக்கு போர்டு தொங்கப்போட்டு பயம்முறுத்துகிறோமே.!!
இதற்க்கு எல்லாம் ஒரு நல்ல காலம் பிறக்கட்டும் என்று இறைவனை இறைஞ்சுவோம்.
6. Re:... posted byhasan faiz (madurai)[07 November 2015] IP: 220.*.*.* India | Comment Reference Number: 42141
நமதூரில் கடைபிடிக்கப்படும் பொதுவான நேரத்திற்கான முறை... அதாவது சாபியா? ஹனாபியா?.. இல்ல வேற எதாவாத? ..இன்னும் குறிப்பா எத்தன அடிப்படையில் தொழுகை நேரம் கடைப்பிடிக்க படுகிறது என்ற தகவல் தெரிந்தால் சொல்லவும். எனது மொபைலில் ஏற்கனவே செயலி இருக்கின்றது.. இது வெளியூர் செல்லும் பட்சத்தில், அதனை setting இல் நான் அமைத்து கொண்டால் , எனக்கு உபயோகமாக இருக்கும்
7. வேதனையான, சோதனையான காலகட்டம் அன்று!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[07 November 2015] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 42152
எனக்கு நன்றாக ஞயாபகத்தில் இருக்கிறது.அந்த ஒரு முந்திய கசப்பான காலம், ஒரு பள்ளயில் பாங்கோசை கேட்டு முடிந்தவுடன், இன்னொரு பள்ளியில் இருந்து ஒரு ஒலிபெருக்க்யில் சொல்வார்கள்,மக்களே சற்று முன் கேட்ட பாங்கின் "ஒக்த்தை" பின்பற்ற வேண்டாம். அது அதிகார பூர்வமான, நம் மார்க்கத்தின் அடிப்படையில் உள்ள நேரமல்ல. சரியான பாங்கின் "ஒக்த்துக்காக"சற்று காத்திருங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்!
அப்படிப்பட்ட வேதனையான, சோதனையான காலகட்டத்தில் விபரம் அறியாமல் திக்குமுக்காடி, தடுமாறிக்கொண்டிருந்த பாமர மக்களாகிய நமக்கு,நம்மை படைத்த அல்லாஹ் நம் எல்லோர்களின் உள்ளத்திலும் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க கூடிய ஒற்றுமையை ஏற்படுத்தி எல்லோரும் ஒருமித்த முடிவோடு ஒற்றிணைந்த இதயங்களாக, இறுதியாக ஒரே ஒரு பாங்கின் நேரத்தை மட்டும் பின்பற்றக்கூடிய ஒருநிலைப்பாட்டை ஏற்படுத்தினான். அல்ஹம்திளில்லாஹ்!
இந்த பாங்கு விஷியத்தில் எப்படி வேறுபட்டு பிறகு ஒன்றுபட்டு ஒற்றுமையாக ஒருங்கிணைந்தோமோ அதே காயல் மக்களாகிய நாம் தான் இன்று இரண்டு பெருநாள் மூன்று பெருநாள் கொண்டாடிகொண்டிருக்கும் ஒரு துரதிஷ்ட்டவாளிகளாய் இருக்கிறோம்!
அன்றிருந்த அதே மக்களின் வாரிசுகள் தானே இன்றும் இருக்கிறோம்,.அன்று நம் உள்ளத்தில் வேரூன்ற விருந்த வேற்றுமையை கழைந்தெறிந்து ஒற்றுமையின் ஒரே நேர்கோட்டில் நின்ற நாம் இன்றும் அதே ஒற்றுமையில் ஓரணியில் ஒன்றாக கலந்த இதயங்க்களாய் ஏன் திகள முடியாது?
முடியும், முயன்றால் முன்னோனின் உதவியால் முடியாதது எதுவும் இல்லை..விட்டுக்கொடுக்கின்ற மனப்பான்மையும் ,, நான் என்ற "ஈகோ"வையும் எடுத்தெறிந்தால் இறைவன் உதவியால் எல்லாமே நன்மையாய் முடியும்!
கண்ணியமிகு பெரியோர்களே,சான்றோர்களே,சன்மார்க்க அறிஞர்களே எல்லோரும் ஒர் அணியில் ஒத்த கருத்துடன் கூடி முயற்சித்து பாருங்கள்,முன்னோனாம் மேலோன் உதவியால் எல்லோரும் மகிழும்வண்ணம் நல்லதொரு தீர்வு கிட்டும்.. அக்காலம் வெகு தூரத்தில் இல்லை என்கின்ற ஒரு இனம்தெரியாத உணர்வு என் உள்ளத்தில் ஊர ஆரம்பித்து விட்டது,அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross