இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம், 08.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று, தூத்துக்குடி ஜெய்லானி தெருவிலுள்ள - கட்சியின் மாவட்ட தலைவர் அலுவலகத்தில் - மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் முன்னிலையில் நடைபெறவுள்ளது.
நிர்வாக பொறுப்பாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் தேர்வு, ஷரீஅத் சட்ட பாதுகாப்பு - ஒரு கோடி கையெழுத்து இயக்கப் பணிகளைத் துரிதப்படுத்தல், திரேஸ்புரம் பள்ளிக் கட்டிடப் பணிகளைத் துரிதப்படுத்தி, தரைதள கட்டிட திறப்பு விழா நடத்தல், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்தல், ஏரலில் பொதுக்கூட்டம் நடத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
இக்கூட்டத்தில் கலந்துகொள்ள - கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், ப்ரைமரி தலைவர்கள், செயலாளர்கள், சிறப்பழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை, கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் தெரிவித்துள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |