ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் காயலர் ஒன்றுகூடல் (காயலர் தினம்) நிகழ்ச்சிகள், 13.11.2015 அன்று துபையில நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, அம்மன்றத்தின் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அன்புள்ளம் கொண்ட துபாய் காயல் நல மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அமீரக வாழ் காயலர்களுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
பொதுக்குழு & காயலர் ஒன்றுகூடல்:
நாம் முன்னரே அறிவித்தபடி, இன்ஷா அல்லாஹ் இம்மாதம் (நவம்பர் ) 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று துபாய் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் வழமை போல் சத்வாவில் அமைந்துள்ள அல் சஃபா பூங்காவில் (கேட் நம்பர் 2) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
வழமை போல் பொதுக்குழுக் கூட்டத்திற்கு குறித்த நேரத்தில் தாங்களும் குடும்பத்தார்கள் மற்றும் காயல் நண்பர்கள் சூழ வருகை புரிந்து கூட்டத்தை சிறப்பிப்பதோடு நமது நலமன்றம் மென்மேலும் சாதனைகள் புரிவதற்கு தங்களின் மேலான ஆலோசனைகளை வழங்கிடவும் உளமார உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் இந்த கூட்ட நிகழ்வை முன்னரே அறிவிப்பது தாங்கள் அனைவரும் முற்கூட்டிய திட்டமிட்டு இந்த நிகழ்வில் குடும்ப / காயல் நண்பர்கள் சகிதம் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்ற அவாவில்தான்.
தன்னார்வலர்கள் தேவை:
வருகை புரிவோரை வரவேற்கவும் திட்டமிட்ட உணவு ஏற்பாடுகளும் மற்றும் விளையாட்டு நிகழ்சிகளும் சிறப்பான முறையில் ஏற்பபாடு செய்ய அதிகமான தன்னார்வ தொண்டுள்ளம் கொண்ட சகோதரர்கள் (volunteers) தேவைப்படுவதால், தயவு செய்து தாங்களாகவே முன் வந்து மன்றத்தின் பொது தொடர்பாளர் சகோதரர் ஈசா அவர்களை அலைபேசி எண் 055-4063711 ல் தொடர்புகொண்டு பதிவுசெய்து
கொள்ளும்படி அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
குலுக்களில் மதிப்புமிக்க பல பரிசுகள்:
இக்கூட்டத்திற்கு முற்கூட்டியே வருகை புரிவோரை உற்சாகப்படுத்தும் பொருட்டு கூட்ட நிகழ்விடத்திற்கு காலை 10:30, 11:30 மணிக்குள் மற்றும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் வருவோருக்கும், காலை 11:30 மணிக்குள் வருகைத்தரும் தாய்மார்களுக்கென பிரத்தியேகமாக ஒரு குலுக்கலும் இடம்பெறும். இக்குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.
மேலும், volunteers களுக்கும், செயற்குழுஉறுப்பினர்களுக்கும் தனித்தனியே குலுக்கல் மூலம் சிறப்புப் பரிசுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஒரு குலுக்கல் நடத்தப்பட்டு ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
சிறப்பு விருந்தினர்:
இக்கூட்டத்திற்கு தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள, IAS Academy-ன் இயக்குநரும் - முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் நிறுவனரும் - இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான பேராசிரியர் முனைவர் சே.மு.முஹம்மதலி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
பயண ஏற்பாடு:
முதீனா LULU CENTER பின்புறம் உள்ள அஸ்கான் D பிளாக்கில் இருந்து வாகனம் முதல் புறப்பாடு சரியாக 8.30 மணிக்கும், இரண்டாவது புறப்பாடு 9.30 மணிக்குமாக ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இது சம்பந்தமாக சகோதரர் முத்து முஹம்மது அவர்களை தொலைபேசி எண் 050-8104842-ல் தொடர்புகொள்ளுங்கள்.
சொந்த வாகனங்களில் வருவோர் கவனத்திற்கு!
பார்க் பகுதியில் மராமத்து வேலைகள் நடந்து வருவதால், கார்களில் வரக்கூடிய சகோதரர்கள் முற்கூட்டியே வரும்பட்சத்தில் பார்க் அருகிலேயே கார்களை நிறுத்த வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். அப்படி கிடைக்காத பட்சத்தில், பள்ளிவாசல் பின் புறத்திலும் அதை தாண்டியும் நிறுத்த நிறைய வசதி
இருக்கிறது. ஷேய்க் ஜெய்து (Shaikh Zayed) ரோடு வழியாக வந்தால் பார்க் கேட் நம்பர் 2 பக்கம் வருவது மிகவும் இலகுவாக இருக்கும். தெய்ராவில் இருந்து RTA பஸ்களில் வரக்கூடியவர்கள், ரூட் நம்பர் 12 ஐ பயன்படுத்துங்கள் தங்களின் மேலான நல ஆதரவை பெரிதும் நாடுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(பொதுச் செயலாளர் - துபை காயல் நல மன்றம்)
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 10:18 / 10.11.2015] |