தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளையால், அதன் நிர்வாகத்தின் கீழுள்ள ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் - பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவியருக்காக அவர்களது வார விடுமுறைக் காலங்களில் தீனிய்யாத் பிரிவின் மூலம் மார்க்கக் கல்வி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அப்பிரிவின் 3ஆம் ஆண்டு விழா, 08.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று 16.00 மணி முதல் 20.00 மணி வரை நடைபெற்றது.
இவ்விழாவில், தீனிய்யாத் பிரிவு மாணவ-மாணவியரின் பங்கேற்பில், பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவுகள், நபிமார்களின் வாழ்க்கை வரலாற்றுத் தொடர், கேள்வி-பதில் நிகழ்ச்சி, ஷிர்க் எனும் இறைவனுக்கு இணைப்புச் செயலைக் கண்டிக்கும் வகையிலான நாடகம் ஆகிய பல்சுவை மார்க்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவ-மாணவியரின் பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் என சுமார் 250 பேர் வரை இந்நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தீனிய்யாத் பிரிவு ஆசிரியர்கள், தவ்ஹீத் ஜமாஅத் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
தகவல்:
‘தேக்’ முஜீப் மூலமாக,
ஷம்சுத்தீன்
(தலைவர் - ததஜ காயல்பட்டினம் கிளை)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |