தமிழ்நாடு சுகாதாரத் துறை, அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை ஆகியன இணைந்து, காயல்பட்டினம் நகர மகளிர் பள்ளிக்கூடங்களில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை 05.11.2015 வியாழக்கிழமையன்று நடத்தின.
அன்று காலையில் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சுகாதார அலுவலர் தேவ திரவியம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா, அரிமா சங்க செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை, அதன் துணைச் செயலாளர் யு.முஹம்மத் நவ்ஃபல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில், டெங்கு காய்ச்சல் தொடர்பாக மாணவியரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியான விடையளித்தோருக்கு அரிமா சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
தீவுத்தெரு அரசு மகளிர் மேனிலைப்பள்ளியில் அன்று மதியம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காயல்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஹில்மீ, சுகாதார ஆய்வாளர் சோமசுந்தரம், பள்ளி தலைமையாசிரியை முஹம்மத் ஆயிஷா, அரிமா சங்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
தகவல்:
U.முஹம்மத் நவ்ஃபல்
அரிமா சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |