இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், அதன் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில நிர்வாகிகளுள் ஒருவரான வழக்கறிஞர் ஜீவகிரிதரன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
தூத்துக்குடி, நவ.11- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் 8-11-15 ஞாயிறு மாலை 5 மணிக்கு 163, ஜெய்லானி தெரு, தூத்துக்குடி என்ற முகவரி யில் மாவட்டத் தலைவர் பி. மீராசா மரைக்காயர் தலைமையில் நடைபெற்றது.
துவக்கமாக ஹாஜி எம்.கே. முஹம்மது அலி (ஹாஜிகாக்கா) கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் எஸ்.ஜே. மஹ்மூதுல் ஹசன் வரவேற்றார். கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி மாவட்டத் தலைவர் எடுத்துரைத்தார். காயல்பட்டின நகரச் செய லாளர் ஏ.எல்.எஸ். அபூசாலிஹ், சங்குகுழி சங்க தலைவர் எம். முஹம்மது மொய்தீன், பொறையூர் ஏ. முஹம்மது ஹனீபா, தூத்துக்குடி நகரச் செயலாளர் முஹம்மது பாஷா உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர், மாநில சட்டத்துறை செயலாளர் வழக்கறிஞர் வி. ஜீவகிரிதரன் ஆகியோர் சிறப் புரையாற்றினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. 1. ஷரீஅத் சட்ட பாது காப்பு - 1 கோடி கையெழுத்து இயக்கத்தை மாவட்டத்தில் துரிதப்படுத்தி குறைந்தது 25 ஆயிரம் கையெழுத்துகளை பெற்று 20-11-15 தேதிக்குள் மாவட்டத் தலைவர், செயலாள ரிடம் வழங்குவது எனவும்,
2. டிசம்பர் இறுதி வாரத்தில் மாவட்டத்தின் அனைத்து பிரைமரிகளிலும் கொடி யேற்று விழா மற்றும் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது என வும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
3) கடந்த 07-05-15 அன்று நடை பெற்றமாவட்ட பொதுக் குழுவில் தேர்வு செய்யப்பட்ட நிர் வாகிகளோடு கீழ்க்கண்ட நிர் வாகிகளும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். கேம்பலாபாத் அப்துல் காதர், காயல்பட்டினம் இப்றாஹீம் அத்ஹம், அரிநாயகிபுரம் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட துணைத் தலைவர்களாகவும், காயல் முஹம்மது சுல்தான் அப்துல் காதர் (பெத்தப்பா), கோமான் வார்டு எம்.எச். அப்துல் கரீம் ஆகியோர் துணைச் செயலாளர்களாக வும்,
முஸ்லிம் யூத் லீக் - திரேஸ் புரம் அஜ்ஹருதீன், முஸ்லிம் மாணவர் பேரவை சுஹைல் இப்றாஹீம், சுதந்திர தொழிலாளர் யூனியன் அப்துல் காலிக், முஸ்லிம் மகளிர் லீக் இஸட். எம். முஹம்மது செய்யது ஃபாத்திமா ஆலிமா, மீனவர் அணி அமைப் பாளர் திரேஸ்புரம் எம். முஹம்மது மொய்தீன், துணை அமைப்பாளர் கற்புடையார் வட்டம் சீனிகண்ணு, தூத்துக்குடி நகர மீனவர் அணி அமைப்பாளர் கே.ஷேக் முஹம்மது, வர்த்தக அணி அமைப்பாளர் தூத்துக்குடி சுலைமான், துணை அமைப்பா ளர் காயல் எம்.யூ அமா னுல்லாஹ் ஆகியோருடன் மாவட்ட செய்தித் தொடர்பா ளராக காயல் ஏ.ஆர். ஷேக் முஹம்மது நியமனம் செய்ய ப்பட்டதையும் இக் கூட்டம் அங்கீகரிக்கிறது.
பள்ளிக்கூட திறப்பு விழா - 4) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டம் சார்பில் திரேஸ்புரம் கிரசன்ட் பள்ளிக்கூட புதிய பள்ளிக் கட்டடப் பணிகள் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகி றது. இதன் கீழ்த் தள பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. திரேஸ்புரம் கிரசன்ட் பள்ளிக்கூட புதிய கட்டடம் மற்றும் காயிதெ மில்லத் நினைவு நுழைவு வாயில் திறப்பு விழா நிகழ்ச்சியை வரும் 27-12-15 அன்று காலை மாநிலத்தலைவர் முனீருல் மில்லத், மாநில பொதுச் செய லாளர், மாநிலப் பொருளாளர் ஆகியோரை அழைத்து விமர்சையாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட் டது. இப் பள்ளியின் கீழ்த் தள கட்டடப் பணிகளை நிறைவு செய்ய பற்றாக்குறையான ரூ.3 லட்சத்தை காயல்பட்டினம் மற்றும் தூத்துக்குடி நகர கிளை கள் சரிபாதியாக பொறுப் பேற்று கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதன்படி காயல்பட்டினம் சார்பில் முன்பணமாக ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரத்தை மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் மாவட்ட தலைவர் பி. மீராசா மரைக்கா யர் அவர்களிடம் கூட்டத்தி லேயே வழங்கினார். திரேஸ்புரம் கிரசன்ட் பள்ளிக்கூட கட்டடப் பணி களுக்கு நன்கொடை வழங்கிய வர்களுக்கு இக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
மூத்த தலைவர் எம். அப்துல் கனி, மாவட்டப் பொருளாளர் கே. மீராசா, துளிர் எம்.எல். சேக்னா லெப்பை, காயல் நகரப் பொருளாளர் எம்.ஏ. முஹம்மது ஹசன், எம்.இஸட். சித்தீக், ஏ.கே. மஹ்மூது சுலைமான், அரபி சாகுல் ஹமீது உள்ளிட்டோர் இக் கூட்டத்தில் பங்கேற்றனர். தூத்துக்குடி நகரத் தலைவர் நவ்ரங் சகாபுதீன் நன்றி கூறினர். கே.எம்.என். உமர் அப்துல் காதர் துஆ ஓதினார்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |