காயல்பட்டினத்தில் இன்று (நவம்பர் 13 வெள்ளிக்கிழமை) நள்ளிரவு துவங்கி, தற்போது (காலை 11.40 மணி) வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இம்மழை இன்னும் பல மணி நேரம் நீடிக்கக் கூடும் என்று தெரிகிறது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று (நவம்பர் 13) வெளியிடப்பட்டுள்ள மழையளவு பட்டியலின்படி, தூத்துக்குடி மாவட்டத்திலேயே அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 48 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
1. Re:.....காயல்பட்டினம் என்ன விதி விலக்கா? posted bymackie noohuthambi (kayalpatnam )[13 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42225
தமிழகத்துக்கு இவை எல்லாம் புதிதா என்ன? நான்கு அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளம் வந்து வாரிச் சுருட்டி போய்க்கொண்டுதானே இருக்கிறது. நிலையை சீரமைக்க என்ன செய்தோம் நாம்? தற்காலிக நிவாரணங்களுடன் நின்றுவிடுகிறோம். பிரச்சினையின் ஆணிவேரைத் தேடுவதே இல்லை. நிரந்தரத் தீர்வுகளை நினைப்பதே இல்லை. காட்டை அழித்துவிட்டு ‘யானை ஊருக்குள் புகுந்துவிட்டது’ என்றும், ‘யானையின் அட்டகாசம்’ என்றும் சபிக்கிறோம். நீர் நிலைகளை நிர்மூலமாக்கிவிட்டு வெள்ளம் வந்துவிட்டது என்று அழுகிறோம். நீரும் யானையும் வெவ்வேறல்ல. இரண்டுமே மரபு வழி உயிரிகள். இடைமறித்தது நாம்தான்.
நம் முன்னோர் இயற்கையை மதித்தார்கள். அபார தொழில் நுட்பங்களுடன் நீர்நிலைகளை உருவாக்கினார்கள். காவிரி, வைகை, பாலாறு, தாமிரபரணி, பவானி, நொய்யல் என ஆறுகளின் வழியெங்கும் ஆற்றுக்கால் தொடர் ஏரிகளை (Riverfed chain tanks) வெட்டினார்கள். பெருமழை வந்தால் வெள்ளம் எங்கெல்லாம் வழிந்தோடும் என்று கணித்து மழை நீர்த்தொடர் ஏரிகளை (Rainfed chain tanks) உருவாக்கினார்கள். தவிர, இயற்கையாகவே ஆறுகளுக்கும் இதர நீர் நிலைகளுக்கும் மனிதனின் நரம்பு மண்டலத்தைப் போன்றதொரு பிணைப்பு இருந்தது. அதில் தண்ணீர் நிலத்துக்கும் மேலேயும் கீழேயும் ஊடுருவிச் சென்றது.
ஆனால், ஓர் உயிரை கண்டந் துண்டமாக வெட்டிக் கொலை செய் ததைப் போல எல்லாவற்றையும் துள்ளத் துடிக்க வெட்டி கூறுப் போட்டுவிட்டோம் நாம். ஏரிகள் இல்லை, குளங்கள் இல்லை, கண்மாய்கள் இல்லை, ஓடைகள் இல்லை, கிணறுகள் இல்லை, பல இடங்களில் ஆறுகளே இல்லை. விளைவாக கோடையில் தண்ணீரின்றித் தவிக்கும் தமிழகம், மழையில் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இப்படி சொல்கிறது தி தமிழ் ஹிந்து.
2. Re:... posted byVilack sma (jeddah)[15 November 2015] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42237
( மக்கீ மாமா அவர்களின் கருத்து பதிவுகள் எப்போதுமே சற்று வித்தியாசமாக இருக்கும் . ஆனால் உண்மைக்கு புறம்பாக ஒருபோதும் இருக்காது )
மக்கீ மாமாவின் கருத்து பதிவு உடைந்த ரொட்டி துண்டில் வெண்ணெய் தடவி நேர்த்தியான கேக் செய்வதுபோல உள்ளது . செய்தி காயல்பட்டினம் பற்றியது . மாமா அவர்கள் இங்குள்ளவர்கள் யாரையும் புண்படுத்தாமல் , மிகவும் நேர்த்தியாக பத்திரிக்கை செய்தியை போட்டு , இறுதியில் ஒரே வரியில் காயல்பட்டினத்தை கண்டுள்ளார்கள் .
பரீட்சையில் கேட்கப்பட்டுள்ள கேள்வி பசு மாட்டை பற்றியது . ஆனால் அந்த மாணவன் படித்து வந்ததோ தென்னை மரம் பற்றியது . சளைக்கவில்லை அந்த மாணவன் . எழுதினான் தென்னை மரத்தை பற்றி . இறுதியாக ஒரு வரி , " இப்படிப்பட்ட தென்னை மரத்தில்தான் பசு மாட்டை கட்டுவார்கள் " .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross