சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 90-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.11.2015 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப்பிறகு, ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள ரோலக்ஸ் உணவக உள்ளரங்கில் வைத்து நடந்தேறிய அந்நிகழ்வுதனை பற்றி அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 90-வது செயற்குழு கூட்டம் கடந்த 06.11.2015 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா-ஷரஃபியாவிலுள்ள ரோலக்ஸ் உணவக உள்ளரங்கில் வைத்து நடைபெற்ற அக்கூட்டத்திற்கு சகோ.எஸ்.எச். ஹுமாயூன் கபீர் தலைமையில் சகோ.பிரபு எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா இறைமறை ஓத சகோ.ஏ.எம்.செய்யது அஹ்மத் வருகை தந்த அனைவரையும் வரவேற்க கூட்டம் இனிதே ஆரம்பமானது.
தலைமையுரை:
சமீபத்தில் நடந்த விபத்தில் நம் ஊரைச் சார்ந்த பெண்மணி படுகாயம் அடைந்த செய்தி அறிந்து நம் மன்றத்து உறுபினர்களும் இன்னும் பிற சகோதரர்களும் அவர்களின் உடனடி மருத்துவ தேவை அறிந்து உதவிக்கரம் நீட்டியதை நினைத்து பார்க்கையில் நெஞ்சம் நெகிழ்கிறது. உதவிய அனைவருக்கும் வல்ல அல்லாஹ் வளமான நீண்ட வாழ்வை தருவானாக என்ற துஆ செய்து, இம்மன்றம் மூலம் நம் மக்களுக்கு இன்னும் பல சேவைகள் செய்ய, இது போன்று ஒற்றுமையுடன் இருந்து நாம் உதவ வேண்டும். என்று வேண்டிக்கொண்டு இம்மன்றம் ஆற்றிய சில சேவைகளை எடுத்துக் காட்டி சுருக்கமாக தனது உரையை நிறைவு செய்தார் மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தில் நிறைவேறிய மன்றப்பணிகள், மற்றும் மன்றம் சார்ந்த செய்திகளையும், நடந்த நிகழ்வுகளையும், வழங்கிய மருத்துவ உதவிகளையும், நிறைவேற்றிய தீர்மானங்களையும் கோடிட்டு காட்டி, இம்மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மிக தெளிவுடன் எடுத்துக்கூறி அமர்ந்தார் மன்ற செயலாளர் சகோ. சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
அதனை தொடர்ந்து பேசிய மற்றமொரு மன்ற செயலாளர் சகோ,எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் மன்றத் தலைவர் கூறியதை குறிப்பிட்டு காட்டி நாம் இம்மன்றம் மூலம் உடனடி தேவை அறிந்து அந்த அவசரகால சிகிசைக்கு தாரளா மனதுடன் அள்ளிக் கொடுத்ததை, இம்மன்றத்தில் நாமும் ஓர் உறுப்பினராக இருக்கிறோமே என்று பெருமிதம் கொள்ள செய்கிறது. அது மாத்திரம் இல்லை அந்த பயனாளிகளின் துஆக்கள் நம்மை சீரோடும் சிறப்போடும் வாழ செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே மன்றத்து உறுப்பினர்கள் நம் மக்களுக்கு பல சேவைகள் செய்திட உங்களுடைய ஊக்கமும் ஆக்கமும் தேவை என்று கேட்டுக்கொண்டு, நம் மன்றத்திலே மூத்த உறுபினராக இருந்து இதுவரை நமெக்கெல்லாம் பல கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி இம்மன்றம் சிறந்து செயல்பட காரணமாக இருந்த நம் அன்பு சகோ. எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் தனது 30 ஆண்டு கால சஊதி அரபிய்யா வாழ்கையை நிறைவு செய்து விட்டு தாயகம் செல்ல இருக்கிறார் அவருக்கு நாம் துஆ செய்வோமாக என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
உறுப்பினர்கள் வாழ்த்து:
அன்பு சகோ. எஸ்.எச்.ஹூமாயூன் அவர்களின் பங்களிப்பு இம்மன்றத்திற்கு பெரும் துணையாக இருந்தது. பொதுக்குழு கூட்டத்தில் அவரின் இடி முழக்க பேச்சு நம் அனைவரையும் கவர்ந்தது. நல்ல பல கருத்துகளை ஆணித்தரமாக சொல்பவர். என்று அவருக்கு புகழாரம் சூடி தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் சகோ.எஸ்.எஸ்.ஜாபர் சாதிக்.
தொடர்ந்து, சகோ. மூசா சாஹிப் - இம்மன்றத்து உறுப்பினர்களுக்கு பல ஆலோசனைகளை தந்து தளராமல் சேவை செய்ய தூண்டுகோலாக இருந்தவர். அவர் இன்று தாயகம் சென்றாலும் நமதூர் மக்களுக்கு நம் மன்றம் சார்பாக முன்னின்று தொடர்ந்து தன் சேவையை செய்வார் என்று நம்புகின்றோம். என்று கூறி துவா செய்து வாழ்த்தினார்.
நான் படித்த பாடசாலையில் இருந்து தொடரும் எங்களின் நட்பு, இந்த அரபிய தேசத்திலும் தம்மாமில் இருந்து தொடர்ந்து வருகிறது. அவரின் நல்ல நட்பும், சேவை மனப்பான்மையும் இதுபோல் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்பது என் அவா என்று அவருக்கு பிரியா விடை தந்தார் சகோ.எஸ்.எச்.அப்துல் காதர். அதனை தொடர்ந்து இதர உறுப்பினர்களும் வாழ்த்தி துஆ செய்தார்கள். அவருக்கு இம்மன்றம் சார்பாக பிரியா விடை கொடுத்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிதி நிலை:
தற்போதைய இருப்பு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உதவிகள் போன்ற விபரம் மற்றும் நிதிநிலைகளை விளக்கினார் பொருளாளர் சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்.
கல்வி உதவிகள்:
உயர் கல்விக்கென நேரடியாக வரப்பட்ட தொழில்நுட்ப கல்விக்கான மனுக்கள் முறைப்படுத்தப்பட்டு, முதலாம் ஆண்டு, மற்றும் தொடர்ந்து பயிலும், Civil Engineering, B.Tech, BE, BE-Mechanic, மற்றும் B-Pharm. என மொத்தம் 10 மாணவ கண்மணிகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டு அவர்கள் சிறந்து விளங்க பிராத்திக்கப்பட்டது.
மருத்துவ உதவிகள்:
மருத்துவ உதவி வேண்டி ஷிபா மருத்துவ கூட்டமைப்பின் மூலமாக பெறப்பட்ட பயனாளிகளின் விண்ணப்பங்கள் வரிசைப்படுத்தப்பட்டு, துணைத்தலைவர் மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது முன்னிலையில் முறையே பரிசீலிக்கப்பட்டது. புற்றுநோய், கர்ப்பப்பை கட்டி, மூட்டுஎலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, கிட்னி, வயிற்றில் கட்டி, மூத்திர குழாயில் அடைப்பு, குடல் இறக்கம், ஈரல் பாதிப்பு, தொண்டையில் தைராய்டு, முழங்கை பாதிப்பு போன்ற பாதிப்புக்குள்ளாகியுள்ள நம் காயல் சொந்தங்கள் மொத்தம் 12 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் பூரண நல பேற்றுக்காக வல்லோன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கப்பட்டது.
தீர்மானம்:
1. கடந்த 04-09-2015, வெள்ளிக்கிழமை மாலை 03:00 மணி முதல் இரவு 11 : 00 மணி வரை மிக குதுகலத்தோடு நடந்தேறிய காயலர் குடும்ப சங்கம நிகழ்வான பொதுக்குழு கூட்டத்திற்கு இடவசதி, வாகன ஏற்பாடு மற்றும் எல்லா வகையிலும் பங்களிப்புகள் செய்த அனுசரணையாளர்கள் அனைவருக்கும், மேலும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த மக்கா, மதீனா மற்றும் யான்பு காயல் சொந்தங்களுக்கும் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். ஜசாக்குமுல்லாஹ் ஹைரா.
2. அன்பு சகோதரர் எஸ்.எச்.ஹுமாயூன் கபீர் இந்த மன்றத்துடன் தன்னை இணைத்து கொண்டு நல்ல பல ஆலோசனைகள் வழங்கி, இம்மன்றம் செம்மையாய் செயல்பட காரணமாக இருந்தவர். அவர் தன் சௌதி அரேபியா வாழ்கையை நிறைவு செய்து விட்டு, தாயகம் திரும்புவதால் இம்மன்றம் அவருக்கு பிரியா விடை கொடுத்து துஆ செய்து வழி அனுப்பி வைக்கின்றது.
3. வல்லுனர்களின் தகுந்த ஆலோசனைகளை முறைப்படி பெற்று, உலக காயல் நலமன்றங்களின் கூட்டமைப்பான ஷிபாவின் பதிவை (Registration) துரிதப்படுத்த இம்மன்றம் வேண்டுகிறது.
4. பெறப்படும் அனைத்து கல்வி மனுக்களையும், ஒன்றுபடுத்தி இக்ரா மூலம் உலக காயல் நலமன்றங்களுக்கு விரைவாக அனுப்பி வைக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறது.
5. அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் டிசம்பர் மாதம், 04-ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்கு பின் நடைபெறும்.
சகோ. எம். டி. இஸ்மத்துல்லாஹ் நன்றி நவில சகோ. எஸ்.எஸ். ஜாபர்சாதிக் பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் இச்செயற்குழு, உறுபினர்களின் நல்ல பல கருத்து பரிமாற்றத்திற்கு பின் இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
சகோ. ஏ.எம்.செய்யது அஹ்மது அனுசரணையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது. செயற்குழு கூட்ட ஏற்பாடுகளை சகோ. சட்னி, எஸ்.ஏ.கே. செய்யிது மீரான் மிக சிறப்புடன் செய்து இருந்தார்.
தகவல்:
S.H. அப்துல்காதர்
புகைப்படம்:
V.S.H. முத்து மொஹ்தூம்
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
06.11.2015.
|