அபூதபீ காயல் நல மன்றத் தலைவர் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பையின் (தொடர்பு எண்: +91 72593 93857) தாயார், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எல்.டீ.மர்யம், இன்று (நவம்பர் 16 திங்கட்கிழமை) 17.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் தலைவர் அல்ஹாஜி வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அவர்களது தாயாரும், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் எல்.டீ.இப்றாஹீம் அவர்களது சகோதரியும், சகோதரர் எம்.எஸ்.முஹம்மத் உமர் அவர்களின் பெரிய தாயாருமான ஹாஜ்ஜா எல்.டீ.மர்யம் அவர்கள், சிறிது சுகவீனத்திற்குப் பின், இன்று காலையில், இறைக் கட்டளைப்படி காலமானார்கள் என்ற செய்தியறிந்து மிக்க கவலையடைந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனப்பதியை அவர்களுக்கு அருள்வானாக. ஆமீன்
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக சகோதரர்கள் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை, எல்.டீ.இப்ராஹீம் எம்.எஸ்.முஹம்மது உமர் ஆகியோருக்கு) எமது அபூதபீ காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலையும், கவலையையும் தெரிவிக்கின்றது.
இந்த மாபெரும் இழப்பைப் பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல இறைவன் அவர்களுக்குத் தந்தருள்வானாக என துஆ செய்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
அபூதபீயிலிருந்து...
S.A.C.ஹமீத்
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |