டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக, காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில், தாயிம்பள்ளி எதிரிலுள்ள மஜ்லிஸுல் கவ்து சங்க வளாகத்தில், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம், இன்று (17.11.2015 செவ்வாய்க்கிழமையன்று காலை 10.00 மணியளவில் துவங்கியது.
இம்முகாமில், தாயிம்பள்ளி ஜமாஅத்தினர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, நிலவேம்புக் குடிநீரைப் பெற்றுப் பருகினர்.
முகாம் ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல் ராஜ், தாயிம்பள்ளி பகுதியை உள்ளடக்கிய 11ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர் ஒருங்கிணைப்பில் - தாயிம்பள்ளி நிர்வாகிகள், மஜ்லிஸுல் கவ்து சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் |