DCW நிறுவனத்தின் செப்டம்பர் 30, 2015 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) நவம்பர் 10 அன்று வெளியாகின.
இந்த காலகட்டத்தில், DCW நிறுவனத்தின் வரவு 339 கோடி ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு: 305 கோடி ரூபாய்), வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக லாபம் 5 கோடியே 57 லட்சம் ரூபாய் என்றும் (முந்தைய காலாண்டு லாபம்: 9.111 கோடி ரூபாய்) இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு இதே காலகட்டத்தின் (July 2014 – September 2014) வரவு 317 கோடி ரூபாய், இலாபம் 2
கோடியே 66 லட்சம் ரூபாய் ஆகும்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 49 கோடி ரூபாய் (இலாபம் - 9.15 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 148 கோடி ரூபாய் (இலாபம் - 19.41 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 143 கோடி ரூபாய் (நஷ்டம் - 2.07 கோடி ரூபாய்), புதிதாக செயல்பட துவங்கியுள்ள Synthetic Iron Oxide Pigment Plant (SIOPP) பிரிவின் வரவு 1 கோடியே, 23 லட்சம் ரூபாய் (நஷ்டம் - 8.36 கோடி ரூபாய்).
|