கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம், 04.12.2015 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள - உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அழைப்பு விடுத்து, மன்றத்தின் செயலாளர் எம்.என்.முஹம்மத் ஸுலைமான் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கத்தர் வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது கத்தர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர மற்றும் 25ஆவது பொதுக்குழுக் கூட்டம், இன்ஷாஅல்லாஹ் - வரும் 04.12.2015 வெள்ளிக்கிழமையன்று, 08.30 மணி முதல் 16.30 மணி வரை, கத்தர் Messaid (Umm Sayyid) Parkஇல் குடும்ப சங்கம நிகழ்சியாக நடைபெறவுள்ளது.
பல்வேறு பொழுதுபோக்கு சிறப்பம்சங்களுடன் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிகளில், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் அனைவரும் - இச்செய்தியையே அழைப்பாகக் கருதி, உங்கள் குடும்பத்தினருடன் தவறாமல் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு, கீழ்க்காணும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:-
சகோதரர் இசட்.எம்.டி.அப்துல் காதர் : 3395 3037
சகோதரர் கத்தீப் ஜியாது : 6645 1359
சகோதரர் முஹமது இப்ராகிம் : 3353 8691
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
கத்தர் காயல் நல மன்றத்தின் முந்தைய (24ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |