[கோப்புப் படம்]
காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் புதிய கத்தீபாக மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ பொறுப்பேற்றுக்கொண்டார். 20.11.2015 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின் அவர், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நகர்வலமாக இல்லம் அழைத்துச் செல்லப்பட்டார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியின் கத்தீபாக, மர்ஹூம் மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ மு.க.செய்யித் அஹ்மத் ஆலிம் முஃப்தீ பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்குப் பின், கீழ நெய்னார் தெருவைச் சேர்ந்த மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ அப்பொறுப்பில் பல்லாண்டுகளாகப் பணியாற்றி வந்தார். தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும், காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வராகவும் கூடுதல் பொறுப்புகளைக் கொண்டுள்ள அவருக்கு, தற்போது உடல் நலம் குன்றியிருப்பதால், கத்தீப் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்ற இயலாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, சிறிய குத்பா பள்ளிக்கு புதிய கத்தீபை நியமித்தல் தொடர்பாக கலந்தாலோசனை செய்திட, பள்ளி நிர்வாகிகளின் கூட்டம் 15.11.2015 ஞாயிற்றுக்கிழமையன்று பள்ளி வளாகத்தில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில், பள்ளியின் புதிய கத்தீபாக, காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஃபிழ் நஹ்வீ செய்யிது அப்துல் காதிர் - ஹாஜ்ஜா நஹ்வீ உம்மு ஹபீபா தம்பதியின் மகனும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன் மஹ்ழரீ (தொடர்பு எண்: +91 98657 59092) நியமிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
20.11.2015 வெள்ளிக்கிழமையன்று (நேற்று) புதிய கத்தீபாகப் பொறுப்பேற்றுக்கொண்ட அவர், தனது முதல் குத்பா பேருரையை நிகழ்த்தியதோடு, ஜும்ஆ தொழுகையையும் வழிநடத்தினார்.
தொழுகை நிறைவுற்றதும், புதிய கத்தீபை - பள்ளி மரபுப் படி - பைத் பாடி அவரது இல்லம் வரை நகர்வலமாக அழைத்துச் செல்லப்படும் என, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ - நிர்வாகத்தின் சார்பில் அறிவித்தார். முன்னதாக, சிறிய குத்பா பள்ளியிலிருந்து வெளியான அறிவிப்பு குருவித்துறைப்பள்ளியின் தகவல் பலகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தகவல் பலகையிலும் இதுகுறித்து அறிவிப்புச் செய்யப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, அனைவரும் புதிய கத்தீபுடன் முஸாஃபஹா (கைலாகு) செய்துகொண்டனர்.
புதிய கத்தீபுக்கு, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் - அதன் செயற்குழு உறுப்பினர்களான மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், வாவு ஷம்சுத்தீன், எஸ்.ஏ.ஜவாஹிர், கே.எம்.டீ.சுலைமான், எம்.பி.ஏ.ஜமால் முஹம்மத் உள்ளிட்டோர் முன்னிலையில் - அதன் பொருளாளர் குளவி ஷேக் அப்துல் காதிர் மலர் மாலை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
சிறுபள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட மன்பஉல் பரக்காத் சங்கத்தின் சார்பில், அதன் நிர்வாகிகளுள் ஒருவரான பீ.எம்.ஏ.முஹ்யித்தீன் தம்பி சால்வை அணிவித்தார். நகரின் மூத்த மார்க்க அறிஞர் எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் அவரது பணி சிறக்க வாழ்த்திப் பிரார்த்தித்தார்.
உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளியின் தலைவர் ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், அதே காரணத்தினால் ஓய்விலிருக்கும் செயலாளர் வாவு எஸ்.காதிர் ஸாஹிப் ஆகியோர், புதிய கத்தீபை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
பின்னர், புதிய கத்தீப் பைத் பாடி நகர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். கீழ நெய்னார் தெரு, கீழ சித்தன் தெரு, தீவுத்தெரு, முத்துவாப்பா தைக்கா தெரு வழியாக - சொளுக்கார் தெருவிலுள்ள அவரது இல்லத்தை நகர்வலம் சென்றடைந்தது. அங்கு அவரது குடும்பத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
நகர்வலம் சென்ற வழித்தடத்தில், மஹான் கலீஃபா அப்பா தைக்கா, பெரிய முத்துவாப்பா அப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
புதிய கத்தீபின் இல்லத்தில், குருவித்துறைப் பள்ளி, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகங்களின் சார்பில் குருவித்துறைப் பள்ளியின் இணைச் செயலாளர் கே.எம்.செய்யித் அஹ்மத் சால்வை அணிவித்தார். ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் சார்பில் அதன் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ, இளைஞர் ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் சார்பில் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத் ஆகியோர் சால்வை அணிவித்தனர். நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின், குருவித்துறைப் பள்ளியில் - அண்மையில் மறைந்த அவரது தந்தை உள்ளிட்ட குடும்பத்தினரின் மண்ணறைகளில் ஜியாரத் செய்த அவர், முதுமை காரணமாக வீடுகளிலிருக்கும் தன் தாயார் உள்ளிட்ட குடும்பத்துப் பெரியவர்களை அவர்களின் இல்லம் தேடிச் சென்று சந்தித்தார். அங்கு அவர்கள் புதிய கத்தீபை வாழ்த்திப் பிரார்த்தித்தனர்.
சிறிய குத்பா பள்ளி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|