நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று 11.15 மணியளவில் துவங்கி, தற்போதும் (14.45 மணி) தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் திருவேங்கட ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வரும் இப்பணியின்போது, நெடுஞ்சாலைத் துறை வருவாய் ஆய்வாளர், திருச்செந்தூர் வட்டாட்சியர் வெங்கடாச்சலம், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ம.காந்திராஜன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், காயல்பட்டினம் தென்பாகம் கிராம நிர்வாக அலுவலர் ஃப்ரான்சிஸ் சேவியர் ஆகியோர் உடனிருந்தனர்.
கே.டீ.எம். தெருவிலுள்ள பல வீடுகளின் கோட்டைச் சுவர்கள் இதன்போது அகற்றப்பட்டு வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின் பேரில், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்த வரிசையிலேயே இப்பணியும் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவயதையறிந்து, ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள் தம் கோட்டைச் சுவரைத் தாமாகவே முன்வந்து இடித்தகற்றியுள்ளார்.
இப்பணியையொட்டி, மின்வாரியத்தினரும், காவல்துறையினரும் முன்னெச்சரிக்கையாக நிகழ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும், காயல்பட்டினம் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கள உதவி:
ஹாஃபிழ் N.A.M.ஈஸா ஜக்கரிய்யா
படங்களுள் உதவி:
M.A.K.ஜைய்னுல் ஆப்தீன்
(துபையிலிருந்து...) ஸிராஜுத்தீன்
காயல்பட்டினத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டு, கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 10:49 / 22.11.2015] |