காயல்பட்டினத்தில் நேற்று (நவம்பர் 21 சனிக்கிழமை) 23.30 மணி துவங்கி, இன்று (நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை) 09.00 மணி வரை தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நகரின் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இன்று 11.00 மணி நிலவரப்படி, காயல்பட்டினத்தில் மழையோ, வெயிலோ இல்லை. எனினும், வானிலை இதமாக உள்ளது. வானம் வெளிச்சமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று (நவம்பர் 22) வெளியிடப்பட்டுள்ள மழையளவு பட்டியலின்படி, காயல்பட்டினத்தில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நகரில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |