தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் சார்பில், காயலர்கள் பங்கேற்ற இன்பச் சுற்றுலா 30.10.2015 அன்று துவங்கி, 3 நாட்கள் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
புறப்பாடு:
நமது தக்வாவின் வருடாந்திர 3 நாள் இன்பச் சுற்றுலா தாய்லாந்திற்கு 200 கிமீ தொலைவில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அழகிய மலை அடிவாரப் பகுதியான kaeng krachan எனும் மலை அடிவாரப்பகுதிக்கு செல்ல திட்டமிட்ட படி 30.10.2015 வெள்ளிக்கிழமை ஜீம்ஆ தொழுகைக்குப்பின் காயலர்கள் 70 நபர்கள் குழந்தைகள் உட்பட அனைவர்களும் SURAWONG ROADல் ஒன்றுகூடினார்கள்.
அங்கு வந்த அனைவருக்கும் நமது காயலின் சுவைமிக்க மீன் பிரியாணி பரிமாரப்பட்டது அதன்பின்னர் சரியாக 3மணி அளவில் SURAWONG ROADல் உள்ள SOI PRASAN திடலிலிருந்து 53 பேர் கொண்ட முதல் குழு இரண்டு அடுக்கு மாடிக்கொண்ட சொகுசு VOLVO BUS ல் பிரயாண துஆவை ஓதிய வண்ணம் கிளம்பியது. அதனை தொடர்ந்து 3.30 மணி அளவில் 1 வேனும்,மேலும் இறுதியாக இரவில் 7.30மணி அளவில் 1 காரும் கிளம்பியது.
பாட்டுடன் பயணம்:
சொகுசு VOLVO BUS ல் பிரயாணம் செய்த இளைஞர்களின் பட்டாளம் அரபி பாடல்கள் பாடியும், நகைச்சுவைமிக்க பேச்சுடன் கலைகட்டியது இயற்கை அழகை ரசித்த வண்ணம் சரியாக மாலை 4.30மணி அளவில் Petch Buri எனும் ஊரில் அமைந்துள்ள Petrol Bunkல் உள்ள paryer hallலில் அசர் தொழுகையை ஜமா அத்தாக ஆண்களும் அதற்கு பிறகு பெண்கள் தனியாகவும் தொழுதார்கள்.
தொழுகை முடித்தவுடன் அனைவர்களும் தேனீர் அருந்திவிட்டு அங்கிருந்து கிளம்பினோம். மீண்டும் இளைய பட்டாளத்தின் ஆக்ரோஷமான நகைச்சுவையுடன் கூடிய பட்டிமன்றம் நடைப்பெற்றது.
தேனீர்:
இறுதியாக சுமார் 7.30மணி அளவில் Boat House Paradise Resortக்கு வந்தடைந்தோம். பிரயாண கலைப்புடன் வந்த அனைவருக்கும் மூலிகை தண்ணீரும், காயலின் சுவைமிக்க இஞ்சி ஏலக்காய் தேயிலை சுட சுட பரிமாரப்பட்டது.
நீச்சல்குளக் குளியல்:
சிறிது நேரத்தில் சுற்றுலாவின் அமைப்பாளர்கள் குழுவினருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Boat Houseல் தங்க வைத்தனர். அவரவர்கள் தங்களின் பொதிகளை தங்களின் குடில்களில் வைத்து விட்டு ஆற்றோரத்தில் அமைந்துள்ள மைதானத்தில் குழுக்களாக அமர்ந்து தங்களின் மகிழ்ச்சியை பரிமாரிக் கொண்டிருந்த வேளையில் இளையஞர்களின் ஒரு சிலர்களும், பெரியவர்களின் ஒரு சிலர்களும் தங்களின் குடில்களுக்கு அருகில் அமைந்துள்ள Swimming pool ல் குளித்தனர்.
தொழுகை:
சரியாக 9மணி அளவில் தொழுகைக்காக அழைப்பு விடப்பட்டு அனைவர்களும் மஃரிப்பையும், இஷாவையும் சேர்த்து ஜமா அத்தாக தொழுதனர்.
இரவுணவு:
சிறிது நேரத்தில் இரவு உணவாக சுவைமிக்க மாட்டுக்கறி spaghetti பரிமாரப்பட்டது. அனைவர்களும் இரவு சிற்றூண்டி முடித்தவுடன் சுற்றுலா குழுவின் அமைப்பாளர்கள் வந்து இருந்த அனைவர்களையும் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்த 6 குழுக்களுக்கும் 6 வண்ணங்களைக் கொண்ட Jersey கொடுக்கப்பட்டது.
அறிவுசார் நிகழ்ச்சி:
பின்னர் connexion எனும் அறிவு சார் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் காரச்சரமாக W.M.N காதர் சாஹிப் அவர்களால் நள்ளிரவு வரை கொட்டும் பனியில் நடைப்பெற்றது நிகழ்ச்சியின் இடையில் பனியில் உள்ள குளிர்ச்சியை போக்க அனைவருக்கும் மிளகுப் பால் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் என்னெவெனில் இதை அழகிய முறையில் Power Point Presentation னை இளவல் W.M.A அப்துஸ் ஸலாம் வடிவமைத்து கொடுத்துள்ளார் அதனால் அனைவர்களும் அந்த இளவலை பாராட்டினார்கள். அதன்பின்னர் அனைவர்களும் அவரவர் குடில்களுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டனர்.
தேனீர் சிற்றுண்டி:
31.10.2015 இரண்டாம் நாள் காலை அனைவர்களும் அவரவர் குடில்களில் சுபுஹ் தொழுகையை நிறைவேற்றினர். சரியாக 7மணி அளவில் அனைவருக்கும் சுடச்சுட தேனீருடன்,பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. தேனீர் அருந்திவிட்டு ஆண்கள் அனைவர்களும் இதமான காலைப்பொழுதில் Swimming pool ல் நீராட சென்று விட்டார்கள்.
காலை உணவு:
9மணி அளவில் பசியுடன் இருந்த அனைவர்களுக்கும் பசியார இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் பரிமாறப்பட்டது.
லீக் முறையில் கால்பந்துப் போட்டி:
சுமார் 11மணி அளவில் 6 அணியினர்களும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இல்லாமல் குதுகலத்துடன் லீக் முறையில் நடைப்பெற்ற கால்பந்து போட்டியில் விளையாடினார்கள்.
இதில் சிறப்பம்சம் என்னவெனில் சிறுவயதில் கூட மைதானத்தை எட்டிப் பார்க்கதவர்கள் இதில் விளையாடி வழமையாக விளையாடும் வீரரை திணரடிக்க வைத்தனர்.இந்த லீக்கில் இளஞ்சிவப்பு அணியினர் அதிக புள்ளிகளுடன் முதலிடத்தை தட்டிச் சென்றனர்.
களறி விருந்து:
விளையாட்டினால் ஏற்பட்டுள்ள களைப்பை போக்க மீண்டும் நீராட சென்று விட்டனர். சரியாக 2 மணி அளவில் அனைவர்களும் லுஹர் அஸர் இரண்டையும் சேர்த்து ஜமாஅத்தாக தொழுதனர். தொழுகைக்கு பிறகு அனைவருக்கும் சுவைமிக்க காயல் களறிக் கறி மற்றும் கத்தரிக்காய் சுவைமிக்க புளியாணம் பரிமாறப்பட்டது.
உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்னும் பழமொழிக்கு ஏற்ப அனைவர்களும் ஓய்வெடுக்க தங்களின் குடில்களுக்கு இளைப்பார சென்றுவிட்டனர்.
விளையாட்டுப் போட்டிகள்:
மாலை 5.30மணி அளவில் தேனீருடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது ஆரம்பமாக சிறுவர்களுக்கான Musical chair, பலூன் உடைத்தல், சாக் ரேஸ் ,walking round game என நடத்தப்பட்டது.பிறகு பெரியவர்களுக்கான போட்டியில் Musical chair, சாக் ரேஸ், walking round, 100 டம்ளர்களை விரைவாக ஒன்றின் பின் ஒன்றாக வைக்கும் போட்டி என்று மாலைப் பொழுது குதூகலத்துடன் களைகட்டியது.
விபத்து:
இந்நிகழ்ச்சியின் சுவாரஸ்யமாக பெரியவர்களுக்கான Musical chair போட்டியில் Chair ரை பிடிக்கும் ஆர்வமிகுதியில் ஒரு சேர உட்காரும் போது நடுவில் இருந்த நாற்காலிகள் நொறுங்கியது அனைவரையும் நகைச்சுவை கடலில் மூழ்கடித்தது.
வினாடி-வினா போட்டி:
அதன் பின்னர் அனைவர்களும் மக்ரிப்,இஷாவை ஜமா அத்துடன் நிரைவேற்றிய பின்னர் இரவு சரியாக 8.30 மணி அளவில் BBQ மற்றும் சப்பாத்தி மற்றும் மட்டன் சால்னா இரவு நாஷ்டாவாக பரிமாரப்பட்டது. 9.30 மணி அளவில் அறிவுசார் நிகழ்ச்சி (quiz competitions) K.S.M.B சூபி அவர்களால் நடாத்தப்பட்டது.
8 சுற்றுகளாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 6 அணிகளுடன் பெண்களையும் ஒரு அணியாக சேர்த்து 7 அணியாக பங்கு பெற்றனர். 7வது சுற்றின் இறுதியில் அனைவருக்கும் சுவைமிகு பாதாம்பால் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் 8ஆவதாக கேட்கப்பட்ட கேள்விகுறிய பதில் முந்தய 7 கேள்விகளுக்குறிய பதிலும் ஒன்றையொன்று தொடர்புடையதாக இருந்தது. இந்த சுற்றில் கேட்கப்படும் கேள்விக்கு மட்டும் 80 மதிப்பெண்கள் என்று நடத்துனர் அறிவிப்பு செய்தார். எனவே இந்த சுற்றில் அனைத்து அணியினரும் அதற்குறிய சரியான பதிலை தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்ற வேளையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் பின் தங்கி தங்களுடைய அணியை களைத்து விடலாமோ? என்று எண்ணிக்கொண்டிருந்த சிகப்பு அணியினர் பதிலளித்து அனைவர்களையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தினர். அதன்பின்னர் அனைவர்களும் அவரவர் குடில்களுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டனர்.
தேனீர் - சிற்றுண்டி:
01.11.2015 மூன்றாம் நாள் காலை அனைவர்களும் அவரவர் குடில்களில் சுபுஹ் தொழுகையை நிறைவேற்றினர். சரியாக 7மணி அளவில் அனைவருக்கும் சுடச்சுட தேனீருடன்,பிஸ்கட்டும் வழங்கப்பட்டது. சரியாக 9மணி அளவில் பூரி கிழங்கு மற்றும் தேனீர் வழங்கப்பட்டது.
சுமார் 11மணி அளவில் படகு சவாரி சென்றோம் ,சுமார் 1 மணி நேரம் சென்ற இந்த சவாரியில் இறைவனின் ஆச்சரியமான படைப்பினங்களை கண்டு ரசித்தோம். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னெவென்றால் குரங்குகள் நீச்சலடித்து அருகில் வந்து திண்பன்டங்களை சாப்பிட்டது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
கோழி பிரியாணி:
சுமார் 1.30மணிக்கு லுஹர் மற்றும் அஸர் தொழுகையை இமாம் ஜமா அத்துடன் முடித்தவுடன் மதிய உணவு தயார் நிலையில் இருந்தது காயல் ஸ்பெஷல் கோழி பிரியாணி மற்றும் கேசரி மற்றும் பழங்கள் ஆகியவை பரிமாறப்பட்டது. மாலை 4 மணிக்கு சுடச்சுட இஞ்சித் தேயிலை அருந்தியவுடன் LUCKY DRAW நடந்தது. மேலும் வந்திருந்தவர்கள் தங்களின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
இறைவேண்டல்:
இறுதியாக ஃபர்ஹான் ஆலிம் ஃபாஸி அவர்கள் நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் நெஞ்சுருக ஏக இறைவனிடம் அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும், வியாபார அபிவிருத்திக்காகவும், பாலஸ்தீனம், சிரியா பொன்ற நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வாழ்க்கை சுபிச்சமாக இருப்பதற்கும் துஆ இறைஞ்சினார்கள் அவைகளை வல்ல இறைவன் கபூல் செய்வானாக! ஆமீன்.
சிறப்பு விருந்தினர்கள்:
இச்சுற்றுலாவிற்காக ஹாங்காக்கிலிருந்து மீரா சாஹிப் ஹாஜி,வாவு காதர் ஹாஜி R.S அப்துர் ரஹ்மான் ஹாஜி மற்றும் நமது தாய்நாட்டிலிருந்து சாகுல் ஹமீது, M.I. அப்துர்ரஹீம் ஆகியோர்கள் வந்து சிறப்பித்தார்கள். குழுப்படம் எடுத்தவர்களாக அனைவரும் மாறாத நினைவுகளுடன் வசிப்பிடம் திரும்பிச் சென்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்வாவின் முந்தைய இன்பச் சுற்றுலா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தக்வா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |