டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் நகராட்சியுடன் இணைந்து - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகிலும், பெரிய நெசவுத் தெரு ஹமீதிய்யா பெண்கள் தைக்கா அருகிலும் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் தலைமையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் ம.காந்திராஜன், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில், ஆண்களும் - பெண்களும் தனித்தனி வரிசைகளில் நின்று, நிலவேம்புக் குடிநீரைப் பெற்றுப் பருகினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை, தமுமுக நகர செயலாளர் ஹஸன், துணைச் செயலாளர் ஜாஹிர், மமக மாவட்ட துணைச் செயலாளர்களான ரியாஸ், ‘முர்ஷித்’ முஹ்ஸின், மமக நகர துணைச் செயலாளர் அப்துர்ரஹீம், மக்கள் தொடர்பாளர் ஷாஹுல் ஹமீத், மமக நகர வர்த்தகர் அணி இம்தாதுல்லாஹ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல்:
‘முர்ஷித்’ K.முஹ்ஸின்
படங்கள்:
இப்னு ஆப்தீன்
தமுமுக / மமக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |