அபூதபீ காயல் நல மன்றத் தலைவரும், துபை (முந்தைய அமீரக) காயல் நல மன்றத்தின் கல்விக் குழு முன்னாள் தலைவருமான வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பையின் (தொடர்பு எண்: +91 72593 93857) தாயார், காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா எல்.டீ.மர்யம், இன்று (நவம்பர் 16 திங்கட்கிழமை) 17.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, துபை காயல் நல மன்றத்தின் சார்பில், அதன் தலைவர் ஜெ.எஸ்.ஏ.புகாரீ வெளியிட்டுள்ள அறிக்கை:-
எமது துபாய் காயல் நல மன்றத்தின் கல்விக் குழுவின் முன்னாள் தலைவரும், இந்நாள் அபூதபீ காயல் நல மன்றத்தின் தலைவருமான அல்ஹாஜ் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை அவர்களது தாயாரும், அபூதபீ காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் சகோதரர் எல்.டீ.இப்றாஹீம் அவர்களது சகோதரியும், சகோதரர் எம்.எஸ்.முஹம்மத் உமர் அவர்களின் பெரிய தாயாருமான ஹாஜ்ஜா எல்.டீ.மர்யம் அவர்கள், சிறிது சுகவீனத்திற்குப் பின், நவம்பர் 16 திங்கட்கிழமை காலையில், இறைக் கட்டளைப்படி காலமானார்கள் என்ற செய்தியறிந்தோம். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
வல்ல ரஹ்மான் மர்ஹுமா அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களின் நல் அமல்களை ஏற்று உயர்வான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக ஆமீன்.
அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் (குறிப்பாக சகோதரர்கள் வி.எஸ்.டீ.ஷேக்னா லெப்பை, எல்.டீ.இப்ராஹீம் எம்.எஸ்.முஹம்மது உமர் ஆகியோருக்கு) எமது துபாய் காயல் நல மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.
இம்மாபெரும் இழப்பை பொருந்திக்கொள்ளும் மனவலிமையையும், அழகிய பொறுமையையும் வல்ல அல்லாஹ் அன்னாரின் குடும்பத்தாருக்கு கொடுத்தருள துஆ செய்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
துபையிலிருந்து...
T.S.A.யஹ்யா முஹ்யித்தீன்
(செயலாளர் - துபை கா.ந.மன்றம்)
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|