காயல்பட்டினம் நகராட்சி பகுதியின் திடக்கழிவுகள் - 13வது வார்டில் அமைந்துள்ள பப்பரப்பள்ளி பகுதியில் உள்ள - நகராட்சிக்கு பாத்தியப்பட்ட - இடத்தில, பல ஆண்டுகளாக கொட்டப்பட்டு வருகிறது.
ஆறுமுகநேரி டவுண் பஞ்சாயத்தை சார்ந்த பேயன்விளை பகுதியில் இருந்து இன்று வாகனம் ஒன்று - கோழிக்கழிவுகளை, பப்பரப்பள்ளி பகுதியில் கொட்ட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்ட அப்பகுதியை சார்ந்த சமூக ஆர்வலர் பன்னீர் செல்வம், அப்பகுதியின் வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.சம்சுதீன் மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளளார். சம்பவ இடத்திற்கு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் விரைந்து வந்தனர்.
வாகன ஓட்டுனரிடம் விளக்கங்கள் கோரப்பட்டதாக் தெரிகிறது. அவரின் பதில் திருப்தியாக இல்லாததால், அவ்வாகனம் - நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
தகவல் மற்றும் படங்கள்:
எம்.எஸ்.எம்.சம்சுதீன்,
13வது வார்டு உறுப்பினர், காயல்பட்டினம் நகராட்சி.
|