நவம்பர் 14 குழந்தைகள் நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் கே.வி.ஏ.டீ. அறக்கட்டளை, துளிர் அறக்கட்டளை, அரிமா சங்கம் காயல்பட்டினம் நகர கிளை ஆகியன இணைந்து, குழந்தைகள் நல சிறப்பு முகாமை, அன்று 10.30 மணி முதல் 14.00 மணி வரை, காயல்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தெருவிலுள்ள குளம் முஹம்மத் தம்பி இல்லத்தில் நடத்தின.
முகாமுக்கு தம் குழந்தைகளுடன் வந்திருந்த 30 பெற்றோருக்கு, திருநெல்வேலி ஷைன் மன இறுக்கம் மற்றும் கற்றல் குறைபாடு மையத்தின் மனநல மருத்துவர் ஜீவா இலவச ஆலோசனைகளை வழங்கினார். குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, சிறந்த ஓவியங்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மருத்துவருக்கும், அவரது குழுவினருக்கும் - கே.வி.ஏ.டீ. அறக்கட்டளையின் நிறுவனர் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
முகாம் ஏற்பாடுகளை, கே.வி.ஏ.டீ. புஹாரி ஹாஜி அறக்கட்டளையின் நிறுவனர் கே.வி.ஏ.டீ.ஜெய்னப் ரஹ்மத், அதன் அறங்காவலரும் - காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினருமான ஏ.டீ.முத்து ஹாஜரா, நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், துளிர் அறக்கட்டளையின் நிறுவனர் வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத், அரிமா சங்க நிர்வாகிகளான எம்.எல்.ஷேக்னா லெப்பை, ‘ஜுவெல் ஜங்ஷன்’ அப்துர்ரஹ்மான், நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.ஹைரிய்யா, எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன், இ.எம்.சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
கே.வி.ஏ.டீ. அறக்கட்டளை தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
துளிர் அறக்கட்டளை தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
அரிமா சங்கம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |