பள்ளிக்கூடம் செல்லும் மாணவியருக்கு - அவர்களின் வாராந்திர விடுமுறை நாட்களில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்காக, காயல்பட்டினம் தைக்கா தெருவில், மஹான் ஸாஹிப் அப்பா தைக்கா வளாகத்தில் 1988ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிறுவனம் மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம்.
இதன் புதிய கட்டிட திறப்பு விழா 18.11.2015 புதன்கிழமை (நாளை) காலை 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
தகவல் & படங்கள்:
MOFA MALIK
மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
மாஷா அல்லாஹு ….. வல்ல நாயன் அல்லாஹ்வின் நல் அருளால் மிக அழகியமுறையில் கட்டி முடித்து கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த மஜ்லிசுன் நிஸ்வான் மகளிர் மதரசாவிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ….
இந்த மதரசா உருவாக உறு துணையான நின்ற அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ்வின் நல் அருள் என்றும் கிடைகட்டுமாக . ஆமீன் ….
3. மர்ஹூம் பாஸித் எனும் அந்த நல்ல உள்ளத்திற்கு முக்கியமாக பிராத்தியுங்கள்..! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam)[18 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42275
நம்மிடமிருந்து விடை பெற்று சென்ற மர்ஹூம் பாஸித் எனும் அந்த நல்ல உள்ளத்திற்கு முக்கியமாக நாம் இந்த நல்ல தருணத்தில் நினைவு கொள்வது முக்கியம் - சிறார்கள் மார்க்கம் பயில சொந்த கட்டிடமில்லாமல் சிரமபட்ட போதெல்லாம் அதிகமாக கவலைபட்டவர் என் அன்பு தம்பி பாஸித் ஆவார் - இன்று அதை நினைத்து பார்க்கிறேன் என் மனம் கனக்கிறது.
இந்த மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் மூலம் சிறார்களுக்கு மார்க்க அடிப்படை விசியங்களை பாடமாக சொல்லி கொடுக்க சொந்த கட்டிடமில்லாமல் பல இடங்களில் பல சிரமங்களுக்கு மத்தியில் செயல்பட்டது என்பதை பலர் அறிவர் - இந்த மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் (சிறார்களின் மார்க்க கல்வி கூடம்) வரும் சில ஆண்டு காலத்தில் சொந்தமாக நிலம் வாங்கப்பட்டு அதில் கூடிய விரைவில் கட்டிடம் கட்டப்பட்டு கண்டிப்பாக அதில் செயல்படும் என பலமுறை சொல்லிவந்த எனது அன்பு பாசத்துக்குரிய தம்பி மர்ஹூம் பாஸித் (அல்லாஹ் அவரின் காரியங்களை பொருந்தி கொள்ளட்டும் - ஆமீன்) அவர்கள் அங்குள்ள நிர்வாககிளுக்கு பல ஆலோசனைகளும் ஊக்கமும் அளித்து வந்து கொண்டு இருந்தார்.
இன்று புது பொலிவுடன் உருவாக அவர் ஒரு முக்கிய காரணம் என்றே நான் கூறுவேன் - ஆனால் இன்று அவர் நம்முடன் இந்த நல்ல நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் இல்லையே என்று நினைக்கும் போது மனம் கனக்கிறது - இறைவன் அவரின் மறுமை வாழ்வை மேலாக்கி வைப்பானாக என நாம் இன்று அவருக்காகவும் (அந்த நல்ல உள்ளத்திற்கு) இந்த நல்ல நிகழ்ச்சியின் போது மறக்கமால் பிராத்திப்போமாக..!
இக்கட்டிடம் நிறைவுபெற எல்லாவகையிலும் உறு துணையாக நின்ற அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல நாயன் அல்லாஹ்வின் நல் அருள் என்றும் கிடைகட்டுமாக . ஆமீன்..! ஆமீன்..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross