நகரின் பிரதான சாலைகளில் ஒன்று ஸீ-கஸ்டம்ஸ் சாலை ஆகும்.
அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜும்மா பள்ளியில் இருந்து கடற்கரை வரை - சுமார் 750 மீட்டர் நீளம் கொண்ட இச்சாலையை, பேவர் பிளாக் முறையில், 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புனரமைக்க, செப்டம்பர் 11 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதற்கான நிர்வாக ஒப்புதல் (ADMINISTRATIVE SANCTION - AS) மற்றும் தொழில் நுட்ப ஒப்புதல் (TECHNICAL SANCTION - TS) ஆகியவை, திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் (REGIONAL DIRECTOR OF MUNICIPAL ADMINISTRATION) அலுவலகத்தில் பெறப்பட்டு, அரசு டெண்டர் இணையதளத்தில் இன்று டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெண்டர் அறிவிப்பில், டெண்டர் ஆவணங்களை - டிசம்பர் 2 மாலை 4 மணி வரை இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும், டிசம்பர் 3 மாலை 3 மணிக்குள் ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்றும், அன்று மாலை 4 மணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் நவம்பர் 13 (வெள்ளிக்கிழமை) அன்று வெளியான விளமபரம்
இது குறித்து நகராட்சி சார்பில் டெண்டர் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள விபரம் வருமாறு:
காயல்பட்டணம் நகராட்சி
இரண்டு உறை மின் ஒப்பந்தப்புள்ளி (eTendering) அறிவிப்பு
ந.க. எண்: 897/2015/அ3 நாள்: 9.11.2015
1. காயல்பட்டணம் நகராட்சி பொது நிதி திட்டம் 2015-16 ன் கீழ் கீழ்க்கண்ட பணி செய்ய நகர்மன்றம் அனுமதி அளித்துள்ளது. மாநில அரசு மற்றும்
மத்திய அரசு பதிவு பெற்ற ஒப்பந்தக்காரர்கள் நகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்தக்காரர்கள் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து
கொள்ளலாம். இருப்பினும் ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்டவர் பதிவு செய்யப்படாத பட்சத்தில் குறைந்த ஒப்பந்தப்புள்ளி விகிதம் அளித்து பணி
உத்திரவு பெற தகுதி வாய்ந்தவராக கருதப்பட்டால் ஒப்பந்தக்காரர் ஏற்பு பதிவு செய்தல் வேண்டும்.
2. ஆணையர், காயல்பட்டணம் நகராட்சி அவர்களால் கீழ்க்காணும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகிறது.
3. மேற்படி ஒப்பந்தப்புள்ளி நமுனாவினை கீழ்க்கண்ட இணையதள முகவரியில் 14.11.2015 முதல் 02.12.2015 மாலை 4.00 மணி முடிய
இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேற்படி ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கூடுதல் விபரங்கள் அறிய
அலுவலக வேலை நாட்களில் நகராட்சி பொறியாளர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்.
4. மேற்படி ஒப்பந்தப்புள்ளி முன்வைப்பத்தொகை வங்கி வரைவோலையாகவோ அல்லது நகராட்சி சேவை மையத்தில் செலுத்திய செலுத்துசீட்டு நகல்
அதன் விபரத்துடன் இணைத்து அனுப்பவேண்டும்.முன் வைப்புத்தொகை வங்கி வரைவோலையாக இருந்தால் ஒப்பந்த அறிவிப்பில் குறிப்பிட்டப்படி 45
நாட்களுக்குள் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். 03.12.2015 அன்று ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும் நேரத்திற்கு முன்பாக பொறியியல் பிரிவில்
வைக்கப்பட்டுள்ள அதற்குறிய பெட்டியில் போடப்படவேண்டும்.
5. இணையதளம் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 03.12.2015 மாலை 3.00 மணி வரை ஆணையர்,காயல்பட்டணம் நகராட்சி
அவர்களால் இணையதளத்திலும் மற்றும் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளி பெட்டியிலும் பெற்றுக்கொள்ளப்படும். மேற்படி
ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் இரட்டை உறை முறை அடிப்படையில் விலைப்புள்ளி உறை மற்றும் தொழில் நுட்ப ஒப்பந்தப்புள்ளி உறை
எனக்குறிக்கப்பட்டு உள்ளதை இணையதளத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 03.12.2015 அன்று மாலை 3.30 மணிக்கு
ஒப்பந்தப்புள்ளி ஆய்வுக்குழுவினர்கள், கலந்து கொண்ட ஒப்பந்ததாரர்கள் முன்னிலையில் ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்படும்.மேற்கூறிய தினம் அரசு
விடுமறையாக அறிவிக்கப்பட்டால் அடுத்த வேலை நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பெற்றுக்கொள்ளப்படும்.
மேற்க்கண்ட ஒப்பந்தப்புள்ளிகள் குறித்த முன் ஆலோசனைக்கூட்டம் (Pre Bid Meeting) 27.11.2015 அன்று காலை 11.00மணிக்கு காயல்பட்டணம்
நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும்.
6.ஒப்பந்தப்புள்ளி படிவங்களை http://municipality.tn.gov.in/tenders / http://tntenders.gov.in இணையதள முகவரியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆணையர்
காயல்பட்டணம் நகராட்சி
[Administrator: கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 7:40 pm / 16.11.2015] |