அக்டோபர் 29, 2012 முதல் - காயல்பட்டணம்.காம் இணையதளம் - தினமும் காயல்பட்டினம் கடற்கரையை - படம் பிடித்து, இணையதளத்தில் வெளியிட்டு வந்துள்ளது.
DCW தொழிற்சாலை கடலில் கலக்கும் கழிவுகளால், கடல் செந்நிறமாவதையும், மாசுபடுவதையும் - புகைப்படங்கள் மூலமாக ஆவணப்படுத்த,
தொடர்ந்து மூன்றாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில், தற்போது மாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று முதல் - அன்றாடும் எடுக்கப்படும் கடல் படங்கள், TWITTER சமூக ஊடகத்தில்
வெளியிடப்படும். இப்புகைப்படங்களை, #dcwredsea, #kayalbeach என்ற ஹாஷ்டேகுகள் (hashtags) மூலம் பார்க்கலாம்.
இந்த மாற்றத்தின் மூலம், காயல்பட்டினம் இணையதள வாசகர் வட்டாரத்தை தாண்டி, பிற மக்களும் இத்தகவலை இனி எளிதாக பெற
முடியும்.
இந்த படங்களை அன்றாடும் பார்க்க, பல வழிகள் உள்ளன.
(1) நீங்கள், TWITTER சேவையை பயன்படுத்துபவராக இருந்தால், இவ்விணையதளத்தின்
TWITTER கணக்கினை (twitter.com/kayalontheweb), தொடரலாம்
(Follow). அதன் மூலம் - இந்த புகைப்படங்கள்/தகவல்கள் உங்கள் அலைபேசியையோ, கணினியையோ நேரடியாக வந்து சேரும்
(2) உங்களிடம் TWITTER கணக்கு இல்லையென்றால், இவ்விணையதளத்தில் - TWITTER ஹாஷ்டேகுகளுக்கு என உருவாக்கப்பட்டுள்ள தனி பக்கம் (kayalpatnam.com/hashtags.asp) மூலம், அதில் உள்ள தேவையான (#dcwredsea, #kayalbeach) ஹாஷ்டேகு இணைப்பை சொடுக்கி,
புகைப்படங்களையும்/விபரங்களையும் பார்க்கலாம்.
இது தவிர, வாசகர்கள் - தங்கள் TWITTER கணக்கு மூலம், #kayalbeach அல்லது #dcwredsea என்று இணைத்து, பதிவு செய்யும் அனைத்து TWITTER மூலமான தகவல்களையும், புகைப்படங்களையும் - மேலே குறிப்பிடப்பட்டுள்ள
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கத்தில் - காணலாம்.
|