டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுப்பதற்காக, காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவில், தாயிம்பள்ளி எதிரிலுள்ள மஜ்லிஸுல் கவ்து சங்க வளாகத்தில், நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம், 13.11.2015 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் துவங்கவுள்ளது.
இம்முகாமில் அனைவரும் பங்கேற்று, நிலவேம்புக் குடிநீரைப் பருகி, உடல் நலனைப் பேணிக்கொள்ளுமாறு, அப்பகுதியை உள்ளடக்கிய 11ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினரும் - நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் |