வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காயல்பட்டினத்திலும். தொடர்மழை பெய்து வருகிறது. நவம்பர் 06 வெள்ளிக்கிழமையன்று 22.30 மணி துவங்கி, நவம்பர் 07 சனிக்கிழமை அதிகாலை 06.00 மணி வரையிலும், நவம்பர் 07 சனிக்கிழமையன்று 23.00 மணி துவங்கி, நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 04.30 மணி வரையிலும் தொடர் கனமழை பெய்தது.
காலையில் வெண்மேகமூட்டம், வெயில் அல்லது வெளிச்சத்துடன் கூடிய வானிலையும், இரவில் தொடர்மழையும் வழமையாகிவிட்டதால், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
எனினும், பல நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, தாழ்வான பகுதிகள் முழுக்க மழை நீர் தேங்கிக் காணப்படுவதால், சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று (நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை) 08.20 மணி நிலவரப்படி மழைப்பொழிவு இல்லை. வெயில் ஒளிர்கிறது. வானிலை இதமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நேற்று (நவம்பர் 07) வெளியிடப்பட்டுள்ள மழையளவு பட்டியலின்படி, மாவட்டத்திலேயே இரண்டாவது அதிகபட்சமாக - காயல்பட்டினத்தில் 92.20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
படங்களிள் உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
நகரில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |