காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா 16.10.2015 வெள்ளிக்கிழமை 16.30 மணியளவில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளி துணைத்தலைவர் எஸ்.எம்.உஸைர் உள்ளிட்ட நிர்வாகிகள், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
பள்ளி ஆசிரியர்களான பீ.ஆனந்தக்கூத்தன், மவ்லவீ எச்.ஜுபைர் அலீ பாக்கவீ ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர். மாணவர் ஹாஃபிழ் என்.ஏ.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை வரவேற்புரையாற்றினார்.
பணி நிறைவு பெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வேலாயுதம் உள்ளிட்ட அவையோருக்கு ஆண்டு விழாக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் - பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார். கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் பள்ளியின் சாதனைகளை விளக்கும் வகையில் அவ்வறிக்கை அமைந்திருந்தது.
இவ்விழாவிற்குத் தலைமை தாங்கிய பள்ளியின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார்.
மத்திய கலால் துறை உதவி ஆணையர் ஏ.முத்தையா (IRS) இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி, சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து, 2014 - 2015 கல்வியாண்டில் பள்ளியின் அனைத்து வகுப்புகளிலும் கல்வித் தரத்தில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அவற்றை வழங்கினர்.
அத்துடன் மாலை அமர்வு நிறைவுற்றது. இரவு அமர்வு 19.00 மணியளவில் துவங்கியது. இவ்வமர்வில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பாடல், நாடகம், கலாச்சார நடனம், த, ப்ஸ் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளியின் உதவி தலைமையாசிரியர் கே.எம்.ஐ.செய்யித் முகைதீன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில் பள்ளியின் அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல் & படங்கள்:
S.B.B.புகாரீ
(ஆசிரியர் - எல்.கே.மேனிலைப்பள்ளி)
எல்.கே.மேனிலைப்பள்ளியின் சார்பில் கடந்தாண்டு (2014) நடத்தப்பட்ட ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
எல்.கே.மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |