காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வந்த நிலையில், நேற்று (நவம்பர் 03 செவ்வாய்க்கிழமை) முழுக்க மழை பெய்யவில்லை. ஓரளவுக்கு வெயிலும் இருந்தது.
இந்நிலையில், இன்று (நவம்பர் 04 புதன்கிழமை) நள்ளிரவில் துவங்கி, அதிகாலை வரை சாரலும், சிறுமழையும் மாறி மாறி பெய்தன.
பல நாட்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, நகரின் பெரும்பாலான வீதிகளில் மழைநீர் தேங்கிக் காணப்படுகிறது.
இன்று 10.15 மணி நிலவரப்படி மழைப்பொழிவு இல்லை. வெயில் ஒளிர்கிறது. வானிலை இதமாக உள்ளது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து நேற்று (நவம்பர் 03) வெளியிடப்பட்டுள்ள மழையளவு பட்டியலின்படி, காயல்பட்டினத்தில் 12.00 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நகரில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|