கொடிய வஞ்சக வலையில் . சிக்க வேண்டாம்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[01 November 2015] IP: 37.*.*.* Romania | Comment Reference Number: 42122
அன்பின் சகோதரர் மக்கி காக்காவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள்.இப்போதுள்ள சூழ்நிலையில் எதுவும் நடக்கலாம்.
நான் இந்த அரசுக்கு எதிராக கருத்து சொல்வதாக தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.சமூக நலப்பணியான ஒரு புண்ணிய முயற்சியில் இறங்கும் நம் முஸ்லிம் சகோதரர்களுக்கு எந்த பாதிப்பும் எந்த நேரத்திலும் வரலாம், அப்படிப்பட்ட ஒரு இன்னல் நிலையை எதிர்கொண்டவர்களாகத் தான் இருக்கிறார்கள் இந் நிமிடம் வரை, இக்கொடிய வஞ்சக வலையில் . சிக்கிவிடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் இதை கூறுகிறேன்!
SDPI அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் இருக்கலாம் ஆனால் மத்திய ஆட்சியோ முஸ்லிம்களை குறிவைத்தே வலை வீசுகிறது,அதற்கு சில நேரங்களில் மாநில அரசும் மண்டியிட வேண்டிய சூழ்நிலை கைதியாக இருக்கிறது,தமிழகம் உட்பட!
அன்புக்குறிய நம்மின சொந்தங்களே,அல்லாஹ்விடம் மனமுருகி கேளுங்கள்,வல்ல நாயகன் நமக்கு நல்வழிகாட்டி நன்மையாக்கித்தந்தருள்வானாக!
உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் மனதில் கொண்டு மிகவும் பாதுகாப்புடன் பொதுப்பணியில் இறங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross