Re:...சுத்தம் சுகம் தரும் posted bymackie noohuthambi (kayalpatnam )[12 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42213
சுத்தம் சுகம் தரும் எச்சில் இரக்க வைக்கும். CLEANLINESS IS NEXT TO GODLINESS
இது நாங்கள் சிறுவர்களாக இருக்குபோது படித்த பாடம். ஆனால் நாட்டில் இன்று நடப்பதென்ன. 68 கோடி மக்களுக்கு கழிப்பறை வசதிகள் இல்லை. நாட்டுக்கு ஏன் போகவேண்டும் நமது ஊரையே எடுத்துக்கொள்ளுங்கள். திரும்பும் இடமெல்லாம் குப்பைகள் நீர் தேங்கும் குட்டைகளாக தெருக்கள் ஆகிவிட்டன. நகர்மன்றதுக்கு வருடம் அரசு தரும் மானியம், தீர்வை முதலானவைகளிளிருந்து கிடைக்கும் வருமானம் எத்தனை கோடி என்று இதே இணையத்தளத்தில் செய்திகளை படிக்கிறேன். ஒரு சொர்க்கபுரியாக இந்த ஊரை மாற்ற முடியும்
ஆனால் கொடுமை என்னவென்றால் இங்கே நகர்மன்ற தலைவி, நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற அதிகாரிகள் என்று மும்முனை போட்டி நடக்கின்றது. ஒரு திட்டமும் இந்த நான்கு ஆண்டுகாலங்களில் உருப்படியாக நடந்ததில்லை. ஒருவரை ஒருவர் குறை சொல்லி மக்களை மாடாக்கும் ஒரு ஆட்சி தான் நடக்கிறது. டெங்கு ஒழிப்பு வாரம் என்று வெறும் ஒப்புக்கு ஏதோ விழாக்கள் நடத்துகிறார்களே தவிர அது ஏன் பரவுகிறது அதற்கான காரணமென்ன என்பதை ஆராய்ந்தால் சுத்தம் இல்லாத நிலைதான் காரணம். பேருந்து நிலையங்களில் சென்று பாருங்கள். நவீன கழிப்பறை வசதி என்று போட்டு அதற்கு பணமும் வசூல் செய்கிறார்கள். உள்ளே சென்று பார்த்தல் அசிங்கம் சொல்லி முடியாது. இதை விட வெளியே ஒரு ஓரமாக சிறுநீர் கழிக்க மலசலம் கழிக்க என்று மக்கள் சென்று விடுகிறார்கள். செல்லும் இடமெல்லாம் நாற்றம் சொல்லி முடியாது. ''நோய் நாடி அதன் முதல் நாடி....'' என்று வள்ளுவம் சொல்கிறது. ''சுத்தம் ஈமானில் பாதி'' என்று இஸ்லாம் சொல்கிறது. சுத்தத்துக்கு என்று ஒரு பெரும் அரசியல் கோஷம் சமீபத்தில் பேச்சில் வல்லவர் நமது பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்தார். ஒன்றும் நடக்காது.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சுத்தம் ஆரம்பிக்க வேண்டும். நமது வீட்டுக் குப்பைகளை சேகரித்து குப்பை வண்டி வரும்போது அதில் கொட்ட வேண்டும் தெருவில் குப்பை கூளங்களை வீசுவது பாவம் என்ற உணர்வு வரவேண்டும். குழந்தையாக இருக்கும் போதே அவர்கள் உள்ளத்தில் அந்த எண்ணத்தை விதைக்க வேண்டும்.அப்போது டெங்கு போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.
வெறும் விழாக்கள் கோஷங்களால் மட்டும் இந்த நோய்களை விரட்ட முடியாது என்பதுதான் நிதர்சன உண்மை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross