செய்தி: பழுதாக்கப்பட்ட சதுக்கைத்தெரு சாலையை உடனடியாக சரிசெய்யக் கோரி நகர்மன்ற அலுவலகம் முன் சதுக்கைத்தெரு பொதுமக்கள் முற்றுகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் posted byN.S.E. மஹ்மூது (Kayalpatnam)[03 May 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 4222
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பல தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைப்பதற்காக பணிகள் துவக்கப்பட்டதாக சொல்கிறார்கள் எங்கே பணிகள் துவக்கப்பட்டது???
சாலை போடுகிறோம் என்ற பெயரில் தெருக்களிலே குழிகளை தோண்டி போட்டு, போக்குவரத்துக்கு இடையூறுகளையும், மழைத் தண்ணீரை தேங்க வைத்து கொசுக்களின் உற்பத்தியையும், அந்த தேங்கிய தண்ணீரின் மூலம் நாற்றத்தையும் உண்டாக்கி மக்களின் முகங்களை சுளிக்கச் செய்து
மக்களுக்கு மன உளைச்சளைத்தான் துவக்கினார்களே தவிர - சாலை அமைப்பதற்கான பணிகளை துவக்கவில்லை.
-----------------------------------
பணிகளை துவக்குகிறோம் என்ற பெயரில் ஒவ்வொரு தெருவிலும் மெஷின்களை வைத்து ரோட்டை சில அடிகள் தூரம்வரை தோண்டி அப்படியே விட்டு வைத்திருக்கின்றனர் நாள் கணக்கில் அல்ல மாதக்கணக்கில். இதனால் மக்களுக்கு எவ்வளவு இடையூறுகள் ஏற்படுகின்றன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பதில்லை.
ஒரு வேலையை ஆரம்பம் செய்தால் அதை செய்து முடிக்க வேண்டும், அல்லது ஆரம்பிக்காமலே இருப்பது நல்லது.
சரி, ரோட்டை தோண்டியாகிவிட்ட பிறகு ஏதாவது காரணத்தால் தொடரமுடியவில்லை என்றால், உடனே தோண்டிய ரோட்டை மூடி, பழைய நிலைக்கு கொண்டுவந்து விட்டுவிட்டால் மக்களுக்கு மேலதிக இடையூறு இருக்காது.
இவைகளையெல்லாம் முறைப்படி செய்யக்கூடியவருக்குத்தான் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட வேண்டும். இந்த தகுதியை எல்லாம் யாரும் பார்ப்பதாக தெரியவில்லை.
--------------------------------
மேலும் மக்களுக்கு ஏற்படுகிற அசௌகரியங்களை நிவர்த்தி செய்வதற்காகத்தான் நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நகர்மன்றம் நடைபெறுகிறது. ஆனால் நமது நகர்மன்றமோ செயலிழந்த மன்றமாக இருக்கிறது. அதனாலே அதிகாரிகள் அவர்கள் இஷ்டம்போல் செயல்பட வாய்ப்பாகிவிட்டது.
அத்தியாவசிய பிரச்சினைகளுக்குத் தேவையான சொற்ப தொகைகளுக்கு நிதியொதுக்க இயலாத ஆணையாளர், புதிய சாலை அமைப்புப் பணிகளுக்கு மட்டும் உடனடியாக பெருந்தொகைக்கான காசோலையை அளிக்கின்றார் என்றால் அதன் பின்னணி என்ன??? மக்கள் சிந்திக்க வேண்டும்!!!
அதுமட்டுமல்ல நகர்மன்ற தலைவருக்கே தெரியாமல், அதிகாரி பெருந்தொகைக்கான செக்கை கான்ட்ராக்டருக்கு கொடுக்கிறார் என்று கூறப்படுகிறதே!!! அது ஏன்? தலைவருக்கு மறைக்க வேண்டிய காரணம் என்ன???
---------------------------------
சாலைகள் போடும் பணிகள் ஒப்பந்தப்படி 31.03.2011 அன்றே முடித்திருக்க வேண்டும் - ஆனால் இன்னும் ஆரம்பிக்கப்படாத (சாலைகளை சிறிதளவு தோண்டி வைப்பது என்பது ஆரம்பம் ஆகாது) சாலைகளே பெரும்பாலும் இருக்கிறது. இந்நிலையில் காண்ட்ராக்டர் எப்படி பெருந்தொகையை பெற முடியும் ? - மொத்த சாலைகளையும் எப்போது போட்டு முடிப்பார்கள்??
ஒப்பந்தம் எடுத்தவர், ஒப்பந்தத்தின்படி முறையான விதிகளை பின்பற்றி சாலைகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். ஒப்பந்த காலத்தில் மண், சிமின்ட், கல் என்று பொருட்களுடைய விலைகள் ஏறினால் அது ஒப்பந்தக்காரரை சார்ந்ததே.
விலைவாசிகள் கூடிவிட்டது என்றோ அல்லது வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்றோ கூறி ஒப்பந்த காலத்தை தள்ளிப் போடமுடியாது.
ஒரு வேளை புயல்,வெள்ளம், சுனாமி, என்றோ அல்லது நாட்டிலே போர் ஏற்பட்டாலோ விதி விலக்குகள் கிடைக்கும்.
அப்படி எதுவும் இல்லை என்பதால் ஒப்பந்தக்காரர் சாக்குப்போக்கு எதுவும் சொல்ல சட்டரீதியான காரணம் எதுவுமில்லை. எனவே மக்களே! உஷாராக இருக்கவும் ஏமாந்து விடாதீர்கள்.
-------------------------------------------
மக்களே!
நகர்மன்ற உறுப்பினர் சகோதரர் நோனா. ஜாஃபர் தலைமையில் சதுக்கைத்தெரு பொதுமக்கள் மட்டும் நகர்மன்றத்தை முற்றுகையிட்டால் போதுமா? மற்ற பகுதி மக்களும் நகர்மன்றம் நோக்கி சென்றால்தான் விடிவு காலம் பிறக்கும்.
"அழுத பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்" மற்றும் "கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும்" என்ற பழமொழிகளுக்கு ஒப்ப பாதிக்கப்பட்ட தெருக்காரர்கள் என்று மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ஊரும் திரண்டு போராடினால்தான் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு சாலைகளை துரிதமாக போடுவார்கள்.
ஆகவே மக்களே நாம் அனைவரும் ஏதோ ஒரு பாதிக்கப்பட்ட தெருவையாவது தினமும் உபயோகிக்கிறோம் அதனால் நம்முடைய உரிமையை நிலைநாட்ட போராடி சாலையை துரிதமாக போட ஆவன செய்யவும்.
நம் முயற்சிகள் வெற்றியடைய எல்லாம் வல்ல அல்லாஹ் ! கிருபை செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross