செய்தி: ஸீ-கஸ்டம்ஸ் சாலை உத்தரவாதம் - நகர்மன்ற தீர்மானத்திற்கு மாற்றமாக - ஓர் ஆண்டு! நகரின் இதர பேவர் பிளாக் சாலை தர கற்களே ஸீ-கஸ்டம்ஸ் சாலைக்கும்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தன்னை யார் கேட்பது என்ற கேள்வியில் காய் நகர்த்துகிறார் நகராட்சி ஆணையாளர்...! posted byதமிழன் முத்து இஸ்மாயில். (INDIA)[17 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42269
கடந்த காலங்களில் நகரில் சாலை அமைக்கப்பட்டு 6 / 8 / 10 / 12 மாதம் கூட ஆகவில்லை குறிப்பாக அப்பாபள்ளி தெரு மற்றும் பல தெருக்களின் சாலை அவலத்தை ஆராய்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நகர்மன்ற கூட்டத்தில் - நகரில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளுக்கு, குறைந்தது மூன்றாண்டு காலம், ஒப்பந்ததாரர் (கேரண்டி) உத்தரவாதம் (DEFECTS LIABILITY PERIOD) தரவேண்டும் என நகர்மன்றத் தலைவர் தீர்மானம் கொண்டு வந்தார்.
பிறகு அது நீண்ட விவாதத்திற்கு பின் - இனி நிறைவேற்றப்படும் சாலை பணிகளுக்கு, இரண்டு ஆண்டு காலத்திற்கு உத்தரவாதம் (கேரண்டி) வழங்கப்பட வேண்டும் என ஒருமனதாக நகர்மன்றத்தில் உறுப்பினர்கள் / ஆணையாளர் / அலுவலர்கள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேறிய போது - பிறகு நிறைவேற்றப்பட்ட நகர்மன்ற தீர்மானத்திற்கு மாற்றமாக நகர்மன்ற தலைவர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு எதிராக ஏன்..? எதற்க்காக ..? ஆவணம் தயார் செய்யவேண்டும்..! என்ன காரணம்..?
ஒன்று மட்டும் மிக தெளிவாக விளங்குகிறது இவர்களின் நடவடிக்கையில் இதில் மிக பெரிய பின்பலத்துடன் கூடிய முறைகேடுகளுக்கு (மோசடிக்கு) இப்பவே ஆயத்தமாகி விட்டார்கள் என்றே தோன்றுகிறது - அங்குள்ள பொதுநல அமைப்புக்கள் / அங்குள்ள பொது மக்கள் இது குறித்து விழிப்புணர்வு பெற்று நகராட்சியில் விளக்கம் கேட்காதவரை நம் நகரில் இனி வரும் காலங்களிலும் இதுவே பார்முலா (முறைகேடுகள்) தொடரும்..!
அந்த ஏரியாவின் உறுப்பினர்கள் யார்..? யார்..? என்ற விபரம் அறிந்து அந்த அந்த ஜமாத் நிர்வாகிகள் இது குறித்து அவர்களிடம் முறையிட வேண்டும் - ஆயிரம் ரூபாய்க்கு ஒரு கை கடிகாரம் வாங்கும் போது கடிகார கடையில் (கேரண்டி கார்டு) தரம் / உத்தரவாதம் கேட்கும் நாம், 46 லட்ச ரூபாய்க்கு நமது வரிபணத்தில் சாலை அமைக்க செலவு செய்ய இருக்கும் சாலையின் உத்திரவாதத்தை அதன் தரத்தை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோமே ஏன்..?
இது குறித்த தெளிவு / விழிப்புணர்வு எப்போது நம் நகர் மக்கள் மத்தியில் சென்றடையுமோ அப்போது நல்ல தரமான சாலைகளை நம் நகர் பெறும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross