தீவிரவாதம் இஸ்லாமிய வழி அல்ல posted byDR D MOHAMED KIZHAR (chennai)[04 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4228
முதன் முதலில் முஸ்லிம்களை தமிழகத்தில் தீவிரவாதி போல் நடத்தியது தி மு க அரசுதான். 1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்புக்கு பிறகு, கிட்டதட்ட எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதி போல் நினைத்து, காவல்துறை மூலம் வீடு வீடாக முஸ்லிம்கள் இல்லத்தை சோதனை செய்த சரித்திரம், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் அமெரிக்காவில் கூட நடந்தது இல்லை.
புனித குரஆன் கூறுகிறது "ஒரு ஆத்ம்மாவை கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவன் போல் ஆவான்" என்று.. இப்படி இருக்கையில் உண்மையான முஸ்லிம், தீவிரவாதம் பக்கம் செல்ல மாட்டான். மீடிஆக்களும், மேற்கத்திய உலகமுமே தீவிரவாதத்தை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி காட்டியது.
கடந்தகால தீவிரவாத, வரலாற்றை எடுத்து கொண்டால், தீரிவாதத்தில் ஈடுபட்டது முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதை அறிய முடியும். இதை ஒரு முழு தலைப்பில் டாக்டர் ஜாகிர் நாய்க் மிக தெளிவாக பேசினார்.
இந்தியாவில் முன்னாள் பெரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை பிரதமர் பிரேமதாச உட்பட பல தலைவர்களை கொன்றதில் முஸ்லிமின் பங்கு ஒரு சதவிதம் கூட இல்லை.
கிறிஸ்தவ பாதிரியார் ஒரிஸ்ஸாவில் உயிருடன் எரித்தது, இந்திரா காந்தியை கொன்றது, மகாத்மா காந்தியை கொன்றது, கனிஷ்கா விமானத்தில் பம்ப் வைத்தது, பஞ்சாபில் பல அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கொன்றது, இதுபோன்ற பல தீவிரவாத செயல்களில் ஒரு முஸ்லிம் கூட கிடையாது.
நக்சலைட்டு என்ற பெயரில் சில மாநிலத்தில் அதி நவீன தீவிரவாதம் செய்பவர்கள் முஸ்லிம்கள் அல்ல. அஸ்ஸாமில் பல தலைமுறை நடத்திய போடாவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை.
ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில முஸ்லிம்கள் இது போன்ற கருக்குதனமான காரியத்தை, செய்தால் அவன் பெயரை கூறி தீவிரவாதி என்று கூறவேண்டுமே ஒழிய, முஸ்லிம் தீவிரவாதி என்று முத்திரை குத்தி முஸ்லிம்களில் முதுகில் குத்தக்கொடாது. அப்படி அழித்தால் எந்த மதமும் தீவிரவாத முத்திரையில் இருந்து தப்பாது.
முன்னர் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்ததில், அரசியல்வாதிகள் கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ், பிஜேபி போன்றைவை ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. இதில் சிறிது நமது மீது அக்கறை காட்டியவர்கள் கம்யூனிஸ்ட் மட்டுமே.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross