Re:...இளையோர் கூட்டம் தலைமை தாங்கும் புதிய பூமி காயல்பட்டினம் posted bymackie noohuthambi (kayalpatnam )[21 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42289
படங்களை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாதிரி உயர் பொறுப்புக்களை வகிப்பதற்கு ஒரு வயது வரம்புகளை நாமாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு காலம் இருந்தது.
ஹஜ்ஜுக்கு போகவேண்டும் என்றால் தாடி நரைத்து வயதான பிறகு போக வேண்டும் என்று எழுதாத ஒரு நடை முறையும் இருந்த காலம் உண்டு,
ஆனால் நபிகள் நாயகம் அவர்கள் வாழ் நாளில் ''YA MAUSHARA SHABAAB ''என்று இளைஞர்களைதான் அழைத்தார்கள் என்று ஹதீது கிரந்தங்களில் காணக் கிடைக்கிறது.
''நூறு இளைஞர்களை தாருங்கள் அவர்களை இந்த நாட்டின் விலை மதிப்பற்ற சிற்பங்களாக்கி காட்டுகிறேன்'' என்று ஒரு அறிஞர் சொன்னார். இது தான் உண்மை. இப்போதுதான் அந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளன.
அதன் பரிணாம வளர்ச்சி ஹாமிதிய்யா மார்க்க கல்வி நிறுவனம் இளைய ஹாபில்களை இந்த மண்ணில் மலர செய்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஹாபில் முஹம்மது முஹிய்யதீன் ஆலிம் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க சிறுபள்ளியின் கதீபாக ஏற்றம் பெற்றிருக்கிறார்கள். அதுவும் புகழ் பெற்ற மேதை நஹ்வி அப்பா அவர்களின் வாரிசு என்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது.
அவரது பேச்சாற்றல், அங்க அசைவுகள் அவர் எடுத்து வைக்கும் குர் ஆன் ஹதீத் விளக்கங்கள் அவரது புகாரி ஷரீப் உரையின் போது நான் செவியுற்று மனம் மகிழ்ந்தேன். எல்லா வகையிலும் சிறப்பு மிக்க இந்த இளைஞர் எல்லா வளமும் பெற்று நீடூழி வாழவும் இவரது பேச்சாற்றல் மூலம் நிறைய பேருக்கு நேர்வழியை அல்லாஹ் நல்கவும் பிரார்த்திக்கிறேன்.
உங்கள் மூலம் ஒருவர் நேர்வழி பெற்றால் அது இந்த உலகம் அதில் உள்ள அனைத்தை விடவும் உங்களுக்கு சிறந்தது என்று நபிகள் நாயகம் அவர்கள் சொன்னதை உலமாக்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அந்த பெரும் பேற்றினையும் அல்லாஹ் உங்களுக்கு தந்தருள்வானாக. உங்கள் து ஆ க்களில் எங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross