Re:...அந்த சுவருக்கும் கேட்கின்ற செவி இருக்கும்.. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்.. posted bymackie noohuthambi (kayalpatnam )[23 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42305
''என்னதான் நடக்கும் நடக்கட்டுமே இருட்டினில் நீதி மறையட்டுமே தன்னாலே வெளிவரும் தயங்காதே ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே'' என்ற பாடல் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது. ''அந்த சுவருக்கும் கேட்கின்ற செவியிருக்கும் .. அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழியிருக்கும்'' என்று இன்னொரு பாடல்...
நாம் செய்யும் தவறுகள் எவ்வளவு காலத்துக்கு பின் வெளி வருகிறது பார்த்தீர்களா...இது நகர்மன்ற தலைவர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நல்லதொரு பாடம்....
தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்த காங்கிரஸ் கூட தோல்வியை சந்திக்க அதே தகவல் அறியும் சட்டம்தான் காரணமாக இருந்தது என்பது இங்கு நினைவு கூர தக்கது.
பொது வாழ்வில் தூய்மை என்பது நாடு தூய்மையாய் இருக்க வேண்டும் என்று கவலைப் படுவதை விட முக்கியம் என்பதை அரசியல் தலைவர்களும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறை வழியில் தங்கள் செல்வங்களை வாரி வாரி வழங்கிய இறை தூதர் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அதே மாதிரி தன் செல்வங்களை இறை வழியில் வாரி வாரி வழங்கிய வள்ளல் - நபி தோழர் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் அவர்களும் இறைவனிடம் கணக்கு கொடுத்துவிட்டு கடைசியாக தான் சுவர்க்கம் நுழைவார்கள் என்ற செய்தி நம்மவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் நாம் எவ்வளவு தூரம் அதைப் பற்றி கவலைப் படுகிறோம் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் இந்த இழிவான செயலிலிருந்து பாது காப்பானாக ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross