Re:..சில நேரங்களில் சில மனிதர்கள் posted bymackie noohuthambi (kayalpatnam )[26 November 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42319
அனிதா ராத கிருஷ்ணன் அவர்கள் காயல்பட்டினம் மக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மன விழாவாகட்டும் மரண வீடாகட்டும் பெயர் சூட்டும் விழாவாகட்டும் மலை வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களாகட்டும் அங்கெல்லாம் இவர் வந்து நின்று தனது பங்களிப்பை செய்வார் என்பதில் மாற்றுக் கருது இல்லை.
ஆனால் அவர் அறிமுகமானது அண்ணா திராவிடம் முன்னேற்றக் கழகத்தின் மேடைகளில்தான். அவர் கலைஞரை தூற்றிப் பேசிய மேடைகளையும் நான் பார்த்திருக்கிறேன். அம்மா அவர்களை வானளாவ தூக்கிப் பேசிய மேடைகளையும் நான் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் இப்படி மனம் மாறி கழகம் மாறி கழகம் சேர்ந்து கலக்கம் அடைகிறார் என்று நான் நினைத்துப் பார்ப்பதுண்டு.
என்னதான் கட்சிக்காக தியாகங்கள் செய்தாலும் அவர்களுக்கு அதற்கான அங்கீகாரம் பாராட்டுக்கள் கிடைக்காத போது இந்த மாதிரி மன அழுத்தங்கள் ஏற்படுவது மனித இயல்புதான்.
கலைஞர் அகவை 92 தாண்டி நிற்பவர் அவரிடம் உள்ள பெரிய குறையே அதுதான். அவரது பலவீனமும் அதுதான். அது வயது கோளாறா அல்லது அவரை சுற்றியிருப்பவர்களின் அழுத்தத்தின் கோளாறா என்பது புரியவில்லை. அவரை விட்டுப் பிரிந்தவர்கள் பணம் பட்டம் பதவி கிடைக்கவில்லை என்பதால் வெளியேறவில்லை என்பது புரிகிறது.
தனக்குரிய அங்கீகாராம் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள்தான் பிரிந்தார்கள். இருந்தாலும் கலைஞரின் அரசியல் சாணக்கியம் அவர்களை மீண்டும் அவரிடமே சங்கமமாக செய்கிறது.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும் இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கட்டும்.
IT TAKES YEARS TO GET A POTENTIAL CUSTOMER BUT
IT TAKES NO SECONDS TO LOSE A CUSTOMER .
இது தொழிலுக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் பொருந்தும். கலைஞரும் அனிதாவும் இதை புரிந்து கொண்டு வாழ்ந்தால் ''நாளை நமதே இந்த நாளும் நமதே'' என்று பெருமிதப் பட்டுக் கொள்ளலாம்.வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross