திருச்செந்தூர் தொகுதியில், திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க., உயர்நிலை செயல்தி்ட்டக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான கருப்புசாமி பாண்டியன், ஆகியோர் தி.மு.க.விலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக, 14.05.2015 அன்று திமுக தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியை, சென்னை கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலையில் 10.30 மணியளவில் நேரில் சந்தித்து, திமுகவில் மீண்டும் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும், அதனடிப்படையில், அவர் மீதான இடைநீக்க உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக தலைவர் மு.கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரைப் பிரிந்திருந்த காலம் மிகவும் துன்பமான காலம் என்றும், தூத்துக்குடி மாவட்டச் செயலாளருடன் இணைந்து மீண்டும் உத்வேகத்துடன் கட்சிப்பணியாற்றப் போவதாகவும் அப்போது அனிதா தெரிவித்தாகக் கூறப்படுகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
தகவல் & படம்:
S.A.K.ஜலீல்
திமுக தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |