டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், அனைத்து மாணவியருக்கும் இன்று (27.11.2015. வெள்ளிக்கிழமை) நிலவேம்புக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அனைவரையும் பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா வரவேற்றுப் பேசியதோடு, மேடையில் வீற்றிருந்தோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், மழைக்காலங்களில் கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், அக்கொசுக்கள் உற்பத்தியாகும் விதம் குறித்தும் - புட்டியில் அடைக்கப்பட்ட கொசுப் புழுக்களை மாணவியருக்குக் காண்பித்து விளக்கிப் பேசினார்.
பின்னர், பள்ளியின் ஆசிரியையர், அலுவலர்கள், மாணவியர் அனைவருக்கும் நகராட்சியின் சார்பில் - 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டீ.முத்து ஹாஜரா அனுசரணையில், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஒருங்கிணைப்பில் நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. நகராட்சி துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லெட்சுமி இணைப்பணியாற்றினார்.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக! |