டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், முஹ்யித்தீன் பள்ளி வளாகத்தில், 23.11.2015 திங்கட்கிழமையன்று, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும் - துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், அரிமா சங்க நிர்வாகி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, முஹ்யித்தீன் பள்ளி ஜமாஅத் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்பகுதியை உள்ளடக்கிய 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
முஹ்யித்தீன் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|