எழுத்து மேடை மையம், தமிழ்நாடு ஏற்பாட்டில் - பிரபல ஆவணப்பட இயக்குனர் ஆர்.பி.அமுதனின் லீலாவதி என்ற ஆவணப்படம் - வரும் சனிக்கிழமை (28-11-2015) அன்று காயல்பட்டினத்தில் திரையிடப்படவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
இறைவனின் திருப்பெயரால்...
ஊழலுக்கெதிரான போராட்டம் குறித்த ஆவணப்படம் திரையிடும் நிகழ்ச்சி
நாள்: 28/11/2015, சனிக்கிழமை
மாலை: 04:30 மணி – 05:45 மணி வரை
இடம்: துஃபைல் காம்ப்ளக்ஸ்
{ஹாஜி அப்பா தைக்கா பள்ளி எதிரில்}
மெயின் ரோடு, காயல்பட்டினம்
`````````````````````````````````````````````
அன்பார்ந்த காயல்வாசிகளே !
பொது வாழ்க்கையிலும் அதிகாரமட்டத்திலும் ஊழலும் முறைகேடுகளும் மோசடிகளும் நிறைந்துள்ள இக்காலகட்டமானது பொதுமக்களாகிய நம்மிடையே அவ நம்பிக்கையும் சலிப்பையும் வேதனையையும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றது.
இந்த எதிர்மறையான சூழலில் பொதுவாழ்வின் தூய்மைக்காக போராடிய மனிதரைப்பற்றிய ஆவணப்படமான “ லீலாவதி “ திரையிடப்பட உள்ளது.
நேர்மைக்காகவும் நீதிக்காகவும் வாழ்வது என்பது மிகவும் உன்னதமானது என்பதை விளக்கும் இந்த ஆவணப்படத்தை திரளாக கண்டு பயனடைய அனைவரையும் அழைக்கின்றோம்.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு, 9171324824 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.
அனைவரும் வாரீர்!
இவண்: எழுத்து மேடை மையம், தமிழ்நாடு
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை பஷீர் (+91 91713 24824)
|