டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) நூலக வளாகத்தில், இன்று (25..11.2015. புதன்கிழமை) 09.00 மணி துவங்கி, 14.00 மணி வரை பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
எஸ்.இ.முஹம்மதலி ஸாஹிப் என்ற டீ.எம். முகாமுக்குத் தலைமை தாங்கினார். நஹ்வீ எம்.இ.அஹ்மத் முஹ்யித்தீன், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி உள்ளிட்ட பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி, நஹ்வியப்பா நற்பணி மன்றம், காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய இம்முகாமில், சுமார் 500 பேர் வரை நிகழ்விடம் வந்து நிலவேம்புக் குடிநீரை நேரடியாகப் பருகியதாகவும், பாத்திரங்களில் வழங்கப்பட்டதன் மூலம் சுமார் 100 பேர் வரை பயன்பெற்றுள்ளதாகவும், முகாம் ஒருங்கிணைப்பாளரும் - காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவருமான எம்.ஏ.கே.ஜைனுல் ஆப்தீன் தெரிவித்துள்ளார்.
அவருடன் எஸ்.ஏ.காஜா, ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல், எம்.எஃப்.காஜா, ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், அரபி அய்யூப் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை இணைந்து செய்திருந்தனர்.
இளைஞர் ஐக்கிய முன்னணி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
நஹ்வியப்பா நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 12:54 / 27.11.2015] |