டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித், ஜாமிஉத் தவ்ஹீத் ஆகிய பள்ளிவாசல்களில் நேற்று (27.11.2015. வெள்ளிக்கிழமை) ஜும்ஆ தொழுகைக்குப் பின், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஜும்ஆ தொழுகையில் பங்கேற்ற பெருந்திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் பெற்றுப் பருகினர்.
ஏற்பாடுகளை, அந்தந்த ஜும்ஆ பள்ளிகளின் நிர்வாகத்தினரது ஒத்துழைப்புடன், நகராட்சி நிர்வாகத்தினரும், நகர்மன்ற உறுப்பினர்களும் இணைந்து செய்திருந்தனர்.
மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நிலவேம்புக் குடிநீரை, நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் பொதுமக்களுக்கு வழங்கிய காட்சிகள்:-
ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வினியோகித்த காட்சிகள்:-
அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
மகுதூம் ஜும்ஆ பள்ளி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய காண இங்கே சொடுக்குக!
|